14.02.2015 அன்று த.மு.எ.க.ச.வின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு நகர்மன்றத்தில் நடைபெற்றது. அம்மாநாட்டில் அன்றே எழுதி அப்போதே இசையமைத்துப் பாடிய இசைப்பாடல் இது.
Sunday, February 15, 2015
Saturday, January 31, 2015
விழைவும் விளைவும்
இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம்.
ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
tpioTk; tpisTk;
r%f khw;wq;fis Kjd;ik Nehf;fkhff; nfhz;Nl ,yf;fpaq;fs;
gilf;fg;gl;L tUfpd;wd.
rq;f fhyk;
njhl;L ,d;iwa etPd gilg;Gfs; tiu mt;tf;fhy kf;fspd; tho;f;if> njhopy;> fy;tp>
gz;ghL> rKjha mikg;G> murpay;> ,tw;wpd; ,Ug;G. elg;Gg; Nghf;Ffisr;
Rl;LtJk;> vl;lNtz;ba ,yf;Ffis ,ak;GtJkhfg; gilf;fg;gl;litNa ,yf;fpaq;fs;
gilg;ghspfisf;
$lf; fzf;fpl;L tplyhk;. mtu;fsJ gilg;Gfspd; vz;zpf;ifia mj;jid Jy;ypakhff;
fzf;fpl;Ltpl KbahJ. mjpYk; Clf ntspr;rj;Jf;F tuhj gilg;ghspfisAk; mtu;fsJ gilg;GfisAk;
fzf;fplNt KbahJ.
nghOJ Nghf;F
,yf;fpag; ( ,d;GW ,yf;fpaq;fshk; ) gilg;ghspfisj; jtpu;j;J Mapuf;fzf;fhd
gilg;ghspfs;> jhd; thOk; ,k;kz;Zyfr; r%fk; ca;aNt jq;fSila gilg;Gfisr;
rpj;jpuk;> ghl;L;> ehlfk;> fl;Liu> rpWfij> neLq;fij > Gjpdk;>
kuGf; ftpij> GJf; ftpij> FWq;ftpij> fbjk; vdg; gy;NtW tbtq;fsp;y;
gilj;jspj;jpUf;fpwhu;fs;.
,d;iwar; #oypy;
ehnlq;Fk; eilngWk; Gj;jff;
fhl;rpfspy;> nkhopkhw;W nra;ag;gl;l> gd;nkhop ,yf;fpaq;fs; cs;spl;l
jkpopy; cs;s ,yf;fpaq;fs; ,yl;rf;fzf;fhd E}y;fshfg; gy;fpg; ngUfpAs;sikiag;
ghu;f;Fk;NghJ ekf;nfy;yhk; ngUikahfNt ,Uf;fpwJ. Xiyr; Rtbfspy; ,Ue;j gz;il ,yf;fpaq;fs;
,d;W FWtl;Lfshf> kpd; E}y;fshf> mkufhtpaq;fshf> mopahj Xtpaq;fshf>
moFw tyk;tUk; epiy ,yf;fpathjpfis neQ;R epkpu;j;jr; nra;Js;sJ.
gpbglhj ngUik
xUGwkpUf;fl;Lk;. ,j;jid gilg;GfSk; vjw;fhf? kf;fisg; gz;gLj;j…
mwk; tsu;f;f… rkePjp kyu;j;j… kj>,d>rhjp
Ngjq;fsw;w rKjhak; cUthf;f.. gaq;fu thjq;fs; ePq;fp mikjp kyu… ngz;zpak; kpspu… xUikg;ghL Xq;f… td;Kiw ePq;f… njhopy;tsk;
ngUf;fpLk; topKiw czu;j;j… vdg; gy
khw;wq;fis ekJ ,e;jpar; r%fj;jpy; Vw;gLj;jj;jhNd. Mdhy; tpioTf;Nfw;w tpisr;ry;
,y;iyNa Vd;?
rpj;ju;fSk;NahfpfSk; rpe;jidapy; QhdpfSk;
Gj;jNuhLVRTk; cj;jku;fhe;jpAk; vj;jidNah cz;ikfis vOjpvOjptr;rhq;f vy;yhe;jhd;gbr;rPq;f vd;dgz;zpf; fpopr;rPq;f?
vd;w
gl;Lf;Nfhl;ilahupd; tupfis ,d;iwf;Fk; epidj;Jg; ghu;f;f Ntjidjhd; kpQ;RfpwJ.
vjdhy; ,e;epiy? vd;gijr; rpe;jpf;f Ntz;bAs;sJ.
vOgJ tpOf;fhL
fpuhkq;fs; epuk;gpa ek; ehl;by;> ,Ugj;njhd;gJ tpOf;fhL vOj;jwpNt ,y;yhj kf;fsplk;
,it Ngha;r; Nrutpy;iy vd;gNj elg;gpay; cz;ik.
vOj;jwpT ngwhj
ghkuu;fis tpLq;fs;. efuq;fspy; thOk; gbj;jtu;fspy; vj;jid tpOf;fhL r%f
mf;fiwNahL E}y;fis thq;fpg; gbf;fpwhu;fs;. md;whl ehl;L elg;Gfis mwpe;J nfhs;s
ehNsLfs;$lg; gbf;Fk; gof;fkw;W ,Ug;gtu;fis ,e;j ,yf;fpaq;fs; vg;gb mirf;fg;
Nghfpd;wd?
mwpahik ,UspYk; %lek;gpf;iffspYk;
%o;fp %r;Rj; jpzwp> fz;lNj fhl;rp nfhz;lNj Nfhyk; vd;W thOk; kf;fis gilg;Gfs; tpopg;gilr; nra;ahj NghJ
gilg;ghspfspd; Kaw;rp tpoYf;fpiwj;j ePuhfty;yth NghfpwJ.
ehl;by;
Mapuf;fzf;fhd tpopg;Gzu;T ,af;fq;fs; ,Uf;fpd;wd. khepyk; jOtpa ,yf;fpa mikg;Gfs;
E}w;Wf;fzf;fpy;… khtl;lk; NjhWk; Gytu;fs;.
ftpQu;fs; ngau;fspy; vz;zw;w fofq;fs;> kd;wq;fs;> Nguitfs;> ,yf;fpa
mikg;Gfspd; $l;lq;fs; ,aq;fpf; nfhz;Ljhd; ,Uf;fpd;wd. .
mit Mz;LNjhWk;>
fhyhz;L> jpq;fs; $l;lq;fs; elj;jpg;
gy E}y;fisAk; ntspapl;Lf;
nfhz;Ljhd ,Uf;fpd;wd. Mdhy; elg;gnjq;Nf? efuq;fspy;> xspnts;s muq;Ffspy;> ,yf;fpa
MSikau;>murpay;thjpfs; jiyikapy; .. ngUe;jdf;fhuu; Kd;dpiyapy; ( E}iyg;
ngw;Wf;nfhs;s) ftpQu;fs;! ( ehYtupf; ftpij vOjptpl;lhNy ftpQu;jhd; )
E}yhrpupau; cwtpdu; gq;Nfw;NghL Kbe;JNghfpd;w rlq;Ffshfj;jhd; ngUk;ghYk;
epfo;fpd;wd.
xU ,yl;rk;Ngu;
trpf;fpd;w efukhapUe;jhYk; xU E}WNgu; mt;tpohtpy; $bdhy; mJ ngUtpoh. (mtu;fSk; me;efupy;
cs;s gy ,yf;fpa mikg;Gfspd; nghWg;ghsu;fshf ,Ug;gu;) ,g;gb efu;g;Gwj;jpy; ehd;F Rtu;fSf;Fs;
ntspaplg;gLk; E}y; fpuhkj;J kf;fisr; nrd;wilfpwjh? mg;gbNa NghdhYk; me;E}y;
gbf;fg;gLfpwjh? vd;gij ehk; rpe;jpf;f Ntz;Lk;.
khepy>
khtl;l> fpuhkg;Gw E}yfq;fs; ,aq;Ffpd;wd. ,yl;rf;fzf;fhd gy;Jiw E}y;fs; mq;F
,Uf;fpd;wd. mtw;iw vj;jidNgu; gbf;fpwhu;fs;? xU r%f mf;fiwAs;s E}yfuhapUe;jhy;
mg;gFjpapy; cs;s rpy nry;te;ju;fisg; Gutyu;fshf;fp> xU gj;J ,UgJ Ngiu cWg;gpdu;fshf;fp
itj;jpUg;ghu; (
tw;GWj;jpj;jhd; )
mg;gFjpapy; cau;epiy> Nky;epiyg; gs;sp ,Ue;jhy; khzt
cWg;gpdu;fspd; vz;zpf;if rw;Wf; $Ljyhf ,Uf;Fk;. Mdhy; ehs;NjhWk; E}y;fs; ngw;Wg; gbg;gtu; vz;zpf;if FiwthfNt
,Uf;Fk;. khztu;fs; kjpg;ngz; vLf;fg; ghlE}y;fisg; gbf;fNt Neuk; NghjhjNghJ
vq;Nf E}yf E}y;fisg; gbg;gJ?
fy;tp
epWtdq;fspy; eilngWk; ,yf;fpa tpohf;fSk; ngw;Nwhu; gq;Nfw;fhj rk;gpujha
epfo;TfshfNt ,Uf;fpd;wd.
khw;wk; Ntz;b kz;il fhaf; fhar; rpe;jpj;J
vOjpa gilg;Gfs; khw;wk;ngw Ntz;ba ghku kf;fisr; nrd;W milahjNghJ vg;gb r%fk;
khWk;?
mg;gbahdhy; E}y;fshy;
gad; ,y;iyah? vd;Dk; Nfs;tp vOk;. kpfg;ngupa r%f khw;wq;fSf;Ff; fhuzkhf gy mupa
E}y;fs;jhd; ,Ue;jpUf;fpd;wd vd;gjpy; khw;Wf; fUj;jpy;iy. Mdhy; ,d;W … gbj;jtu;
tPl;by;$l gad;jUk; E}y;fs; ,y;iy. tuNtw;giw. gLf;ifaiw> cz;Zk; miw> fopg;giw>
xJq;Fk; miw. nghUs;fisg; gJf;Fk; miw> G+ir nra;tjw;Fk; G+idfs; tsu;g;gjw;Ff;
$l miwfs; ,Uf;Fk; tPLfspy; Gj;jf miw vd;W xd;W ,Ug;gjpy;iyNa.
,d;iwa
ngUk;ghd;ik Nfspf;if Clfq;fSf;F ( rpd;dj;jpiu> tz;zj;jpiu ) kj;jpapy; kf;fis mwpthu;e;j E}y;fisg; gbf;fr;
nra;tJ vd;gJ kpfg;ngupa rthyhf cs;sij r%f Mu;tyu;fs; xj;Jf;nfhs;fpwhu;fs;.
,jw;F ehk; vd;d
nra;ayhk;.?
E}y;fis tpUk;gp
kf;fs; tuhjNghJ kf;fis Nehf;fp E}y;fisf; nfhz;L nry;y Ntz;Lk;.;. ntspr;rj;jpw;F ntspr;rk; NghLtij tpLj;J ,Uis
Nehf;fp tpsf;Nfe;jpr; nry;tJjhNd mwpTilik.
Mk;. fiy
,yf;fpathjpfs; fpuhkq;fis Nehf;fp ntspr;rk; gha;r;r Kay Ntz;Lk;.
gbj;jtu;fs;> gzk; gilj;jtu;>murpay; mjpfhuk; fpilj;jtu;fs; kj;jpapy;
E}y;fis ntspapl;L> tpku;rpj;J kypT
tpsk;gu ntspr;rj;jhy; kfpo;tij tpl> ve;j mbj;jl;L kf;fSf;fhf E}y;fs;
gilf;fg;gl;ldNth> me;j kf;fspilNa me;E}y;fisg; Goq;f tpl Ntz;Lk;.
vOgJ tpOf;fhL fpuhkq;fSf;Fk; ,g;gbr; nra;tJ
,aYkh? vdj; jpiff;fyhk;. xt;nthU ,yf;fpa mikg;Gk; xt;nthU jpq;fSk; Fiwe;jJ xU
xd;wpaj; jiyefupyhtJ xU E}iy mwpKfk; nra;ayhNk.
ek;khy; KbAkh vd;wpUe;jhy; ez;L$lr; rpupf;Fk;.
Njbj;Njb E}y;fisg; gjpg;gpj;j c.Nt.rh.topapYk;> jiyapYk; NjhspYk; E}y;fisr;
Rke;J fpuhkq;fs; NjhWk; kf;fisg; gbf;fr; nra;j elkhLk; E}yfkhf tpsq;fpa
kd;dhu;Fb ,uhkhkpu;jk; nuq;fehjd; guk;giuapy; te;j ek;khy; Kbahnjd;why; NtW
ahuhy;jhd; KbAk;?
kf;fs; $Lk; fpuhkrig> kfspu; Ra cjtpf;FOf;
$l;lq;fSf;F fiy ,yf;fpa mikg;Gfs; nry;tJk;> $l;lr; rpwg;G miog;ghsu;fSf;Fg;
nghd;dhil Nghu;j;Jtjw;Fg; gjpy; E}y;fisf; toq;Fk; gof;fj;ij cUthf;FjYk; gadspf;Fk;.
E}ypd; fUj;J
nghjpe;j vOj;Jfis kf;fNshL Ngrr; nra;a Ntz;Lk;.
E}ypy; cs;s
fUj;Jfisf; fiy tbtpy; fhl;rpg;gLj;jp> E}iy mwpKfk; nra;jhy; me;E}iyg;
gbf;Fk; Mu;tk; mjpfupf;Fk;. ( njUf; $j;Jfis elj;jpj;jhNd gz;ila Guhz ,jpfhr
E}y;fis ek;khSq;f gug;gp ,Uf;fhq;f) ,d;iwf;Fk;
GJikf; fUj;Jfisg; gug;g> fiy ,yf;fpa mikg;Gfs; ifahSk; rpwg;ghd cj;jp
mJjhNd.
E}y;fisg; gilg;gNjhL
kl;Lk; flik Kbe;J tpLtjpy;iy. gilj;jtw;iwg; ghkuu;f;Fk; czu;j;jp gad; tpisar;
nra;tJk; gilg;ghspfspd; nghWg;Ng.
Wednesday, January 14, 2015
தைத்திங்கள் முதல் நாளே..
இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம்.
ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
தைத்திங்கள் முதல்நாளே தமிழருக்குப் புத்தாண்டு
தமிழ்ப்பண் பாட்டோடு மகிழ்ந்துநீ கொண்டாடு
ஞாலத்தின் முதல்தொழிலாய் வேளாண்மை தனைக்கொண்டு
காலத்தை அதன்வழியே வகுத்தானே நம்தமிழன்
ஆடிப்பட்டம் தேடிவிதைத்துப் மார்கழியில் மகசூல்கண்டு
கூடிக்களிக்கும் நாளாய்க் கொண்டானே தைமுதல்நாளை -- தைத்திங்கள்
சுழல்கின்ற புவிசெழிக்கச் சூரியனை முதன்மை கொண்டான்
சூரியவீதியி்ல் தங்கும் உடுக்கள் பன்னிரண்டு கண்டான்
சுறவம்முதல் சிலைஈறாய் சுழன்றிடும் ராசிகள் பெயரைச்
சூட்டியேதிங் களைவகுத்துச் சுறவத்தைத் தைமுதல் என்றான் -- தைத்திங்கள்
கார்கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனிலென
காலநிலைக் கேற்பபொழுதைப் பருவங்களாய்ப் பகுத்து வைத்தான்
வெயில்மழைக் குளிர்பனி கடந்து பின்பனியின் விடியல் பொழுதின்
விளைந்ததை இயற்கை மூலவெய் யோன்முன் படைத்தானே -- தைத்திங்கள்
திங்களைப் பகுத்திட்ட திறன்மிகு தமிழ்ச் சான்றோர்
திடமுடன் தமிழாண்டு தொடங்கிய காலம் சொன்னார்
தீங்கனிச் சுவையுற்றாம் திருக்குறள் மறையைத் தந்த
திருவள் ளுவராண்டே தமிழாண்டு எனக் கொண்டார் -- தைத்திங்கள்

Tuesday, January 13, 2015
எது தமிழ்ப் புத்தாண்டு?
திருவள்ளுவர் ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டும்.
உலகில் அனைத்து நாடுகளும் கிரிகோரியன் ஆண்டினைத் தங்கள் புத்தாண்டாக ஏற்கவில்லை என்பது கண்கூடு.மதம், மொழி, இனம் சார்ந்தே அந்தந்த நாடுகள் தங்கள் புத்தாண்டை வகுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் தமிழன் மட்டும் ஏன் “பிரபவ” முதல் “அட்சய” ஈறாக உள்ள, சுழற்சிக்கு ஒவ்வாத, தமிழ்ப் பெயரல்லாத அறுபது ஆண்டுகளைத் தமிழாண்டுகளாகக் கொண்டாடும் சாறுண்ணியாக தனித்தன்மையின்றி இருக்க வேண்டும் எனக் கருத்தூன்றி உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஆக்கித் தந்த அறிவாசான் திருவள்ளுவர் பெயரிலேயே தமிழாண்டை நிறுவினர்.
திருவள்ளுவர் பிறந்ததாகப் பல தமிழறிஞர்களாலும் ஆய்வடைப்படையில் ஏற்றுக் கொள்ளப் பட்ட கி.மு.31 ஆம் ஆண்டைத் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாக அறிவித்தனர்.
பல்வேறு அரசியல் மாச்சரியங்களுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசு இதனை 2008 முதல் நடைமுறைப் படுத்த ஆணை பிறப்பித்தது. அதன்படி கி.பி ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்ட திருவள்ளுவர் ஆண்டு வரும். ( 2015உடன்31ஐக் கூட்ட 2046)
திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாக எந்தத் திங்கள் என்பதையும் தமிழக மக்களின் வேளாண் தொழில் பயனீட்டும் திங்களான தை முதல் நாளே திருவள்ளுவராண்டின் தொடக்கத் திங்கள் என்பதையும் வகுத்தளித்தனர்.
தமிழ்த் திங்கள்களின் பெயர்களும் பண்டைய வானவியல் அறிஞர்களால் கீழ்வானில், சூரியவீதியி்ல் அவ்வக்காலத்தே தோன்றும் உடுக்களால் ( விண்மீன்களால் ) உருவாக்கப்படும் தொகுப்பு வடிவங்களை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்பட்டு வந்துள்ளன.
அவை
சுறவம்- ( தை) சுறாமீன் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி
கும்பம் -( மாசி) குடம் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி
மீனம் - ( பங்குனி ) மீன்போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
மேழம் - ( சித்திரை) ஆடுபோலத் தோன்றும் விண்மீன் தொகுதி
விடை - ( வைகாசி ) எருது போலத் தோன்றும் விண்மீன் தொகுதி
ஆடவை - ( ஆனி ) இரட்டையர் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
கடகம் - ( ஆடி ) நண்டு போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
மடங்கல் - ( ஆவணி ) அரிமா ( சிங்கம்) போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
கன்னி - (புரட்டாசி ) பெண் உருவம் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
துலை - ( அய்ப்பசி) துலாக்கோல் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
நளி - ( கார்த்திகை ) தேள் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
சிலை - ( மார்கழி ) வில் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
இந்த விண்மீன் தொகுதிகளின் வடமொழிப் பெயர்களிலிருந்தே சித்திரை முதல் பங்குனி வரை வழங்கப் பட்டு வந்தது.
சைத்ர- சித்திரை, வைசாகி - வைகாசி, மூலன் - ஆனி, உத்திராட - ஆடி, அவிட்ட - ஆவணி, புரட்டாதி - புரட்டாசி, அசுவதி - அய்ப்பசி, கிருத்திகா- கார்த்திகை, மிருகசீர்சா - மார்கழி, புனர்தை - தை, மகசி - மாசி, பல்குனா-பங்குனி.
தமிழ் உயர்தனிச் செம்மொழி என அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுவதும், அவ்வாண்டின் தொடக்கத் திங்களாக சுறவம் ( தை ) சுறவம் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு நாளாகவும், அந்நாளையே தமிழர் திருநாளாக, வேளாண் மக்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் நன்னாளாக . பொங்கல் திருநாளாகக் கொண்டாடி மகிழ்வதே தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகக் கொள்வோம்.
.
Monday, January 12, 2015
இளந்தென்றல் கலைமன்றம்-10ஆம் ஆண்டு பொங்கல் விழா.
நான் வசிக்கும் புதுக்கோட்டை சண்முகாநகர் மற்றும் விரிவாக்கப் பகுதியின் ஒருமைப்பாட்டை வளர்க்கும் குறிக்கோளுடனும் இளந்தலைமுறையினரின் பல்திறன் மிளிர்த்தும் நோக்கோடும், இளந்தென்றல் கலைமன்றம் என ஒரு அமைப்பினை தி.பி.2036 ஆம் ஆண்டு சுறவம் முதல்நாள் (14.01.2006)ல் தோற்றுவித்து, ஆண்டுதோறும் தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம்.
இளைய தலைமுறையினரிடம் பொதிந்து கிடக்கும் பல்வகைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் அவர்களுக்கான பேச்சு, பாட்டு, கவிதை, ஓவியம். நடனம், விளையாட்டு ஆகிய போட்டிகளை நடத்தி அன்றைய நாளில் பொதுமேடையில் தமிழ்ச் சான்றோர்களை அழைத்து அவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டி வருகிறோம்.
இச்செயல்பாட்டில் இப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கமும் இணைந்து விழாவினை மேன்மேலும் சிறப்படையச் செய்து வரு்கின்றது.
அவ்வகையில் இவ்வாண்டின் (10ஆம் ஆண்டு) தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினையொட்டி, குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்பித்தல், பேச்சு, பாட்டு, ஓவியப் போட்டிகள் 11.01.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது.
அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பகுதி சாராத நடுவர்களைக் கொண்டு, குடியிருப்புப் பகுதியினை மூன்று பிரிவாகப் பிரித்து, வண்ணக் கோலப்போட்டி நடைபெற்றது. அனைத்து இல்ல வாயில்களும் வண்ணக்கோலங்களால் மிளிர்ந்தது. தேர்வுசெய்வதில் நடுவர்களே பெருந்திகைப்படைந்தனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் பங்கேற்ற அனைவர்க்கும் ஆறுதல் பரிசளிக்க விழாக்குழு முடிவுசெய்துள்ளது.
எதிர்வரும் திருவள்ளுவர் ஆண்டு 2046 சுறவம் திங்கள் முதல்நாள் ( 15.01.2015 ) காலை விளையாட்டு வீரர்கள் விளையாட்டுச் சுடரேந்தி நகர்வலம் வர உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நடக்கத் தெரிந்த குழந்தைகளிலிருந்து நடைதளர்ந்த முதியவர் மற்றும் மகளிர் பங்கேற்கும் பலவகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
அன்று மாலை6.00 மணிக்குப் பொது மேடையில் பகுதிக் குழந்தைகளின் மாற்றுடைப் போட்டியும் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற உள்ளன.
அறிவுத்திறன் மற்றும் உடல்திறன் போட்டிகளின் வெற்றி யாளர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வு அன்று மாலை நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு தொலைக்காட்சி புகழ் கவிஞர் நா.முத்துநிலவன் குழுவினர் பங்கேற்ற பட்டிமன்றம் சிறப்பாக நடை பெற்றது.
இவ்வாண்டு இராபர்ட்-புவனர் குழுவினரின் கிளாசிக் குழு திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழர் திருநாளைத் தரணியெங்கும் இதுபோலக் கொண்டாடுவோமே.

Tuesday, December 9, 2014
காலநிலை மாற்றம் எதனாலே?
22ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் இரண்டாம் நாள் மாலை , மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்களின் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையி்ல் பொது மேடையில் “காலநிலை மாற்றம் எதனாலே?” என்னும் கருத்தமைந்த கீழ்வரும் பாடலை அன்றே இயற்றி அன்றே இசையமைத்துப் பாடினேன்.
மேடையிலிருந்த சான்றோரும் குழந்தை விஞ்ஞானிகள், வழிகாட்டி ஆசிரியர்கள் தமிழக 32 மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்திருந்த தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என 2100 பேர்களும் அரங்கதிர கையொலி எழுப்பிப் பாராட்டிய பாடல். என்னுடைய 351 ஆவது பாடல் இது.

முன்னெடுப்பு
ஆடியில காத்தடிச்சு ஆவணியில் மழைபெய்ஞ்சு
ஆறுகுளம் நிரம்பிவய அமோகமா வௌஞ்சதப்பா,
மாசம்தையில் பொங்கவச்சு மக்கநல்லா வாழ்ந்தகாலம்
மறுபடியும் வராதான்னு மனசுரொம்ப ஏங்குதப்பா
எடுப்பு
காலநிலை மாறிப் போச்சுங்க - அதன்
காரணமே நாம தானேங்க
காற்றைநீரைக் கெடுத்துப் புட்டோங்க- அதைக்
காப்பதுதான் நமது வேலைங்க
காக்கணும் காக்கணும் இயற்கை வளத்தைக் காக்கணும்
போக்கணும் போக்கணும் செயற்கைத் தனத்தைப் போக்கணும் - காலநிலை
தொடுப்பு
காடுகரை அழிச்சு எங்கும் கட்டட மாக்கிட்டோம்
கம்மாஏரிக் குளத்தைத் தூத்துக் குடியும் ஏறிட்டோம்
கடல்நீரும் ஆவியாகாமக் கழிவால் நெரப்பிட்டோம் - இப்போ
கழுதைக்குக் கல்யாணம் பண்ணி மழைக்கு வேண்டுறோம்
சுருங்கிச் சுருங்கி வான்மழையின் அளவும் சுருங்குது
எறங்கி எறங்கி நிலத்தடிநீர் மட்டம் எறங்குது --காலநிலை
நல்லது கெட்டது எல்லாத்துக்கும் வெடிகள் வெடிக்குறோம்-பெரும்
நஞ்சைக் கக்கும் அணுக்கதிரை வானில் நெரப்புறோம்
நச்சுக்காத்தால் விண்வெளியைச் சூடு ஏத்துறோம் - அப்பறம்
நல்லாமழை பெய்யலேன்னு ஒதட்டைப் பிதுக்குறோம்
உருகி உருகிப் பனிமலைங்க ஒயரம் கொறையுது
உயரும் கடல்நீர் மட்டம் இந்த நெலத்தை விழுங்குது -- காலநிலை
வேதிஉரம் புச்சி மருந்தில் வௌச்சல் பெருக்குறோம் - அதில்
விண்ணும் மண்ணும் பாழாப்போகும் நெலைய மறக்குறோம்
காருவண்டி ஆலைக்கழிவால் காத்தைக் கெடுக்குறோம் - அட
காலங்கெட்டுப் போச்சுதுன்னு கெடந்து பொலம்புறோம்
காலம்மாறிக் காத்து மழை சுழன்று அடிக்குது
கணக்கில்லாம உயிர்கள் மண்ணில் பொதைஞ்சு அழியுது -- காலநிலை
Monday, December 8, 2014
22 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேசிய அறிவியல் தொழில் நுட்பப் பரிமாற்றக்குழு மற்றும் மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையும் இணைந்து , திசம்பர்த் திங்கள் 7,8, 9 ஆகிய நாள்களில் புதுக்கோட்டை லேணா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 22ஆவது தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை நடத்தியது. மாநில அறிவியல் இயக்கத்துடன் மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் இம்மாநாட்டினை ஒருங்கிணைத்திருந்தனர்.
எனது குடும்பத்தில் எனது தம்பி சுரேசைத் தொடர்ந்து பெயரன் பரிதி இளம்வழுதியின் இழப்பையும் அடுத்தடுத்து சந்தித்த துயரத்தில் கடந்த பல நாள்களாக எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாது இருந்த என்னை மாநாட்டு வரவேற்புக்குழுவில் இடம்பெறச் செய்தனர் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாவட்டப் பொறுப்பாளர்கள். அந்த வகையில் நான் கலந்து கொண்ட நிகழ்வு இது.
தனிமனிதத் துயரினும் மேலாக மனித குலத்தையே அச்சுறுத்தும் கால நிலை மாற்றம் மற்றும் வெப்பநிலையைப்புரிந்து கொள்ளுதல் என்னும் கருப்பொருள் பற்றிய இம்மாநாட்டில் இயன்ற பங்கினை ஆற்றிட முனைந்தேன்.
திசம்பர் 6ஆம் நாள் தொடக்கவிழாவி்ல் “புவியைக் காத்திடும்” என்னும் பாடலுடன் எனது பணி தொடர்ந்தது. மாநிலத் தலைவர் பேராசிரியர் என்.மணி அவர்கள் தலைமையிலும் மவுண்ட் சீயோன் கல்விக்குழுமத் தலைவர் திரு .ஜெயபரதன் செல்லையா அவர்கள் முன்னிலையிலும் புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் அறிவியல் கண்காட்சியினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்..
அறிவியலறிஞர் த.வி.வெங்கடேசுவரன் அவர்களின் தொடக்க உரையினைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.இங்கர்சால் அவர்களின் கருத்துரையும் கல்வியாளர்களின் வாழ்த்துரையும் நடைபெற்றது.
“நீங்களும் விஞ்ஞானியாகலாம்” என்னும் அமர்வில் இளம் விஞ்ஞானிகளுடன் முது விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடைபெற்றது.
மாநாட்டில்32 மாவட்டங்களலிருந்து 253 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டன. 1600 குழந்தை விஞ்ஞானிகளும் 200 வழிகாட்டி ஆசிரியர்களும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பெற்றோர், பார்வையாளர் என 2000 பேர் பங்குபெற்ற மிகப் பெரிய மாநாடாக இருந்தது.
இரண்டாம் நாள் பிற்பகல் 40 கருத்தாளர் பங்குபெற்ற 15 இணை அமர்வுகள் நடை பெற்றன.
அதில் “மந்திரமா தந்திரமா?” என்னும் தலைப்பில் நான் கருத்தாளராக இரண்டு மணி நேரம் இளம் விஞ்ஞானிகளுடன் கருத்துகளைப் பகிரும் வாய்ப்பு கிடைத்தது.
ஆசிரியர் கருத்தரங்கத்தினை அடுத்து த.அ.இ. மாநிலச் செயலாளர் திரு அமலராசன் அவர்கள் தலைமையில் மேநாள் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆலோசகர் முனைவர் பொன்ராஜ் அவர்கள் அறிவியல் பேருரையும் மாணவர் சந்திப்பும் நடந்தது.
அந்நிகழ்வின் தொடக்கத்தில் “காலநிலை மாறிப்போச்சுங்க“ என்னும் பாடலைப் பாடும் வாய்ப்பு எனக்களிக்கப்பட்டது.
பாடல் பின்னர்...

Subscribe to:
Posts (Atom)