Tuesday, August 25, 2015

அறிவியல் அற்புதங்கள்

            புதுக்கோட்டை சத்தியமங்களம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில்  அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் சார்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களின் திறன் வெளிப்பாட்டு சிறப்பாசிரியர்களுக்கான ஐந்துநாள் உண்டு உறையுள் பயிற்சிமுகாம் நடைபெற்று வருகிறது.
               
            புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் சீரிய ஒருங்கிணைப்பில் 24.08.2015ல் தொடங்கி 28.08.2015 வரையில் நடைபெற்றுவரும் மண்டல அளவிலான. இப்பயிற்சியில் பதினான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 54 சிறப்பாசிரியர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
               
            தேர்ச்சி பெற்ற சிறந்த கருத்தாளர்கள் பயிற்சி அளித்து வருகிறார்கள்  அந்நிரலில் 25.08.2015 அன்று மாலை அறிவியல் அற்புதங்கள் பற்றிய செயல்விளக்கம் பாவலர் பொன்.கருப்பையா அவர்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

            அறிவியல் மனப்பான்மையினை வளர்க்கும் நோக்கத்துடன் பல்வேறு எளிய அறிவியல் ஆய்வுகளும், அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளில் காணப்படும் அறிவியல் உண்மைகளும்  செயல்விளக்கத்தோடு செய்து காட்டப்பட்டது.

              பயிற்சி ஆசிரியர்கள் ஆர்வமுடன் தாங்களும் முன்வந்து ஆய்வுகளில் பங்கேற்றது சிறப்பாக அமைந்தது.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தாங்கள்
அறிவியலிலும் வித்தகர் என்பதை
இன்றுதான் அறிந்தேன்
மகிழ்ந்தேன்
நன்றி ஐயா

மணிச்சுடர் said...

இருபத்தைந்தாண்டு காலமாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டப் பொறுப்பில் இருந்து கொண்டு, அறிவியல் மனப்பான்மையினை மாணவர்களிடம் வளர்க்க பள்ளி சார்ந்த “எளிய அறிவியல் ஆய்வுகள்“ அறிவியல் சார்ந்த நழுவப்படக் காட்சி, காகித மடிப்புக் கலை, முதலிய நிகழ்ச்சிகளையும், கிராமப்புற மக்களிடையே மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளை அகற்ற “மந்திரமா தந்திரமா?“ “அறிவியல் அற்புதங்களை விளக்குதல்“. முதலிய நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறேன் அய்யா. மாற்றம் வேண்டி.

Post a Comment