இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம்.
ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
புதுக்கோட்டை மாவட்ட காசநோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயக்க செயற்குழு முனைவர் ராஜ்குமார் அவர்கள் தலைமையில் இன்று கூடியது.
அக்சயா-ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன்,,மாவட்டச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, தா.சிவராமகிருஷ்ணன், முருகேசன். கந்தசாமி, வினோத், அருள், விசயலெட்சுமி ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட கிராமப்புறங்களில் காசநோய்ப் பாதிப்பாளர்கள் நலன் பேணுதல் பற்றி விவாதித்தனர்.
காச நோய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப வருவாய் பெருக்கத் திட்டமாக,
அவர்களுக்கு சிறுதொழில் தொடங்க உதவுதல்.
அதற்கான வல்லுநர்களைக் கொண்டு பயிற்சியளித்தல்,
அவர்களின் செய்பொருள்களைச் சந்தைப்படுத்தல் முதலானவை பற்றி பேசப்பட்டது.
அக்டோபர் முதல் வாரத்தில் சிறுதொழில் முனைய விரும்புவோர்க்கு பயிற்சியளிப்பது எ்ன்றும் திறனடைவிற்கேற்பக் கச்சாப் பொருள்களை அடுத்த கட்டமாக வழங்குவது என்றும் முடிவாற்றப்பட்டது.
புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவ மனையில் தொடர்ந்து காச நோய்க்கான சிகிச்சை மேற்கொள்வோர்க்கு காசநோய்ப்பிரிவு இணை இயக்குநர் அனுமதி பெற்று, ஊட்டச்சத்து பயறுவகை பாரம்பரிய உணவுத் தானியப் பொட்டலங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

3 comments:
வாழ்த்தி வரவேற்போம்
தங்கள் பணி தொடர எனது வாழ்த்துகள்
நல்லதொரு செயலுக்கு வந்தனம்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
Post a Comment