சுமை யென்று நினைக்காதே முதியவரை -நீ
சுவை கொள்ளத் சுகந்தன்னை இழந்தவரை
சொந்த மெல்லாம் நீயேயென் றிருந்தவரை - வாழும்
சொர்க்க மெனப் போற்றிடுவாய் இறுதிவரை.
முந்நூறுநாள் வயிற்றில் சுமந்து உன்னை - நல்
முத்தாகக் காப்பாற்றி வளர்த்த அன்னை
மூப்பினால் வயதாகித் தளர்ந்த பின்னே -ஒதுக்கி
முதியோர் இல்லந் தன்னில் சேர்ப்பதென்னே?
தந்தையின் சொத்ததினில் உரிமை கொண்டாய் - அருந்
தாயவள் கருணையதால் வளர்ந்து நின்றாய்
தாங்கிடும் விழுதெனவே நினைத் திருந்தார்-உற்ற
தளர்ச்சியைப் போக்கிட நீஏன் மறந்தாய்?
பட்டினி கிடந் துனக்குப் பாலூட்டி-கடும்
பத்தியம் இருந் துனது நோய்போக்கிப்
பாங்குடன் நல்வாழ்வில் உனை அமர்த்தி - அவர்
பரிதவித் தலைதல் பாவம் நெஞ்சிலிருத்து.
முறுக்குடன் நீயும் இன்று விளங்கிடலாம்- நாளை
முதுமையும் உனை வந்து முடக்கிடலாம்
முன்கையின் வழிநீளும் முழங்கையைப் போல் -முறை
முழுதை யும்உன் பிள்ளை தொடர்ந்திடுமே.
-- அக்தோபர் முதல் நாள் உலக முதியோர் நாள்.

1 comment:
பட்டினி கிடந் துனக்குப் பாலூட்டி-கடும்
பத்தியம் இருந் துனது நோய்போக்கிப்
பாங்குடன் நல்வாழ்வில் உனை அமர்த்தி - அவர்
பரிதவித் தலைதல் பாவம் நெஞ்சிலிருத்து.
நன்று சொன்னீர் ஐயா
முதியோர் சுமையல்ல
நம் சொத்து
நன்றி ஐயா
Post a Comment