மழைத்தாயே...மன்னிப்பாயே.
மண்ணுலகைக் காக்கும் ஏ...மழைத்தாயே - உந்தன்
கண்ணீரின் சீற்றம் தனைத் தணிப்பாயே
வான்மழையே உன்னைநம்பி கால்பகுதி நிலமதிலே
வாழும் மக்கள் வாழ்வ தனைச் சிதைக்காதே - வெள்ளம்
வந்ததெல்லாம் போதும் இன்னும் வதைக்காதே
காடுகளை அழிச்சு அங்கே ஆலைகளை அமைச்ச தப்பு
வீடுகளில் ஏசிசெஞ்சு வெளிக்காத்தைக் கெடுத்த தப்பு
சூடுஏத்தி ஓசோன் குடையைச் சுக்குசசுக்காக் கிழிச்ச தப்பு
பாடுபட்டப் பயிர்களையே பறிகொடுத்துத் தவிக்கிறோ மிப்ப - மண்
நீர்வடியும் பாதையெல்லாம் நிரவிவீடு கட்டுன குத்தம்
தூர்வாராக் கம்மாயெல்லாம் தொழிற்பேட்டை யாக்குன குத்தம்
ஊர்முழுதும் குப்பையைக்கொட்டி உன்வழியைத் தடுத்த குத்தம்
சோர்ந்தபின்னே உண ர்ந்துட்டோமே சோதிக்காம காத்திடு நித்தம்- மண்
4 comments:
உணர்ந்தால் போதுமா ஐயா
பரிகாரம் செய்வது எப்போது என்று
மழை கேட்கின்றது
நன்றி ஐயா
தப்புக்கு தண்டனை...
செய்துகொண்டிருக்கிறோம்... சேர்ந்து விதைக்கலாமா அய்யா...
வலை தளம் கட்டமைப்பு அருமையாக இருக்கு தாத்தா...
Post a Comment