Monday, March 28, 2016

வீதியில் ஒதுங்கிய வரிகள்

“வீதி ” கலை இலக்கியக் களம் பற்றி எழுந்த எண்ணங்கள்
25 ஆவது  சிறப்பு நிகழ்வின் அடர்த்தி மற்றும் கால நெருக்கடி குறித்து அரங்கில் பகிரப்படாத வரிகள் இங்கே...


          

இதயமெழு  எண்ணங்களை ஈடேற்ற வாய்த்த களம்
          இலக்கிய தாகம் தீர்க்கும் இன்சுவை நீர்த்தடாகம்
கருத்துக் கதிர் விளைக்கும் கலைஇலக்கியக் கழனி
         கற்பனைச் சிறகடிக்கக் கைகொடுக்கும் காற்றுவெளி

பண்பாட்டுப் பயிர் விளையும் பசியநல் நாற்றங்கால்
         பல்சுவைத் திறன் வளர்க்கும் பயன்மிகு பயிற்சிக்கூடம்
தயக்கநடை பயில்வோரைத்  தாங்கித் தள்ளும் நடைவண்டி
          தளர்வினில்  சுகமளிக்கும் சுமைதாங்கி மேடைக்கல்

திறன்களைத் திரட்டித் தரும் தீஞ்சுவைத் தேன்கூடு
            திகட்டாத விருந்தளிக்கும் தெள்ளமுதக் கனிச்சோலை
வாடாது மணம் பரப்பும் வண்ணமலர்த் தோட்டம் - அது
            வெள்ளித் ்திங்கள் காணும் வேட்கைமிகு வீதிக்களம்.

2 comments:

Geetha said...

வீதியே நீங்க தானே அய்யா...அது எப்படி ஒதுங்கும் எனது கவனக்குறைவாலும்.இரவே எழுதிட வேண்டுமென்ற ஆர்வத்தாலும்....வந்த குறை இது மன்னிக்கவும்...உங்களைப்போன்றவர்களிடமிருந்து நான் கற்று கொள்பவளாகத்தான் இன்னும் வாழ்கின்றேன்..தவறுக்கு வருந்துகின்றேன்.பாடல் மிக அருமை..வீதியில் சேர்த்துள்ளேன் ...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
அருமை
தாங்கள் இருக்கும்இடம்
திகட்டாத விருந்தளிக்கும் தெள்ளமுதக் கனிச்சோலைதான்

Post a Comment