பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 133 ஆவது பிறந்த நாளில் அவருடைய பகுத்தறிவுச் சிந்தனைகளில் சில துளிகள் புதுக்கோட்டை பாவலர் பொன்.கருப்பையா அவர்களின் பாடல் வரிகளாக...
சொன்னாரே கேட்டீயாப்பா - அய்யா
சொன்னாரே கேட்டீயாப்பா
பகுத்தறிவே உன்னை உயர்த்தும் படிகள்ன்னு
சொன்னாரே கேட்டீயாப்பா -- சொன்னாரே
ஒழைச்சுப் பொழைப்பவந்தான் ஒசத்தி - மத்தவன்
ஒழைப்பிலே வாழ்பவனுக் கிகழ்ச்சி
பிறப்பிலே ஏதுங்கடா பேதம் - நம்மைப்
பிரிக்கத்தான் செஞ்சுவச்சான் வேதம்வேதமுன்னு - சொன்னாரே
சாமிவேத சகுனம் மூடமந்திரம் - நம்மைப்
பயமுறுத்திப் பணியவச்ச தந்திரம்
பஞ்சாங்கச் சாத்திரங்கள் மோசம் - காசு
சம்பாதிக்க அவன்போட்ட வேசம் வேசமுன்னு - சொன்னாரே
புளுகுமூட்டைப் புராணங்களை ஒதுக்கு - தமிழன்
பண்பாட்டுக் கதுரொம்ப இழுக்கு
நாகரிகச்சிந் தனையைப் பெருக்கு- பழைய
காட்டுமிராண்டித் தனம் எதுக்கு எதுக்குன்னு - சொன்னாரே
அறிவென்னும் ஆயுதத்தைத் தீட்டு - உந்தன்
அறியாமைப் பேயைஅதால் ஓட்டு
மூடநம் பிக்கைகள் ஒழிந்தால் -பல
மோசடிப் பேர்வழிகள் வேசம் களையுமுன்னு - சொன்னாரே
சாதிமறுப்புத் திருமணத்தை நடத்து -நாட்டில்
சமநீதி படருமதைத் தொடர்ந்து
தேவையில்லாச் சடங்குகளை நிறுத்து - உன்னைச்
சூத்திரன்னு சொன்னவனைத் துரத்து துரத்துன்னு - சொன்னாரே
அறிவுக்குத் தலைதாழ்த்தி வணங்கு - உனக்கு
ஆற்றல்தரும் செயலுக்கு நீ இணங்கு
ஆகமத்தின் புரட்டுகளை ஒதுக்கு - இல்லா
ஆண்டவன் வழிபாட்டை நிறுத்து நிறுத்துன்னு - சொன்னாரே
No comments:
Post a Comment