புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 3.10.2011 முதல் 9.10.2011 வரை அப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. முகாமின் இரண்டாம் நாள் 4.10.2011 பிற்பகல் 4.00 மணிமுதல் 7.00 மணி வரை முகமை மாணவத் தொண்டர்களுக்கு ” பேரிடர் மேலாண்மை-இயற்கைச் சீற்றங்கள், மீட்பு மற்றும் முதலுதவி” பற்றிய பயிற்சி, தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் புதுக்கோட்டை ஜே.ஆர்.சி செயற்குழு உறுப்பினர் பாவலர் பொன்.கருப்பையா அவர்களால் அளிக்கப் பட்டது. பயிற்சியில் இயற்கையைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருமுன் காக்கும் உத்திகள், பேரிடரில் பாதிக்கப் பட்டோரை மீட்டல், முதலுதவி அளித்தல் பற்றிய செயல் விளக்கங்கள் செய்து காட்டப்பட்டன. மூர்ச்சையுற்றோரை சுய நினைவுக்குத் திருப்புதல், செயற்கைச் சுவாசமளித்தல், காயம்பட்டோரின் இரத்த ஒழுக்கை நிறுத்தும் முறைகள், எலும்பு முறிவுகளுக்குக் கட்டுப் போடுதல், நீரில் மூழ்கியோரை மீட்டலும் முதலுவியும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டலும் முதலுதவியும், பாதிக்கப் பட்டோரைத் தூக்கிச் செல்லும் முறைகள், அவசியமான கட்டுகளும் முடிச்சுகளும் பற்றிய செயல்முறைகள் முகாம் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடனும் ஈடுபாட்டுடனும் இருந்தது பாராட்டத் தக்கது.
முகாமின் திட்ட அலுவலர் திரு செல்வக்குமார் அவர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்திருந்தார்.
முகாமின் திட்ட அலுவலர் திரு செல்வக்குமார் அவர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்திருந்தார்.
No comments:
Post a Comment