12.10.2011 அன்று புதுக்கோட்டை பெருமாநாடு சுதர்சன் கல்வியியல் கல்லூரியில் எளிய அறிவியல் ஆய்வுகள் பற்றிய ஒருநாள் பயிலரங்கம் சிறப்பாக நடை பெற்றது. கல்வியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரெங்கராசன் அவர்கள் தலைமையேற்றார். துணை முதல்வர் திரு இராசா சுவாமிநாதன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் புலவர் பொன்.கருப்பையா அவர்கள் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ” கற்பித்தலில் பயன் தரும் எளிய அறிவியல் ஆய்வுகள்” என்னும் தலைப்பில் செயல் முறை களுடன் பயிற்சியளித்தார்.
நடுநிலை, மேல்நிலை பயிலும் மாணவர்களுக்கு பயிற்றுவித்தலில் செலவில்லாத, குறைந்த செலவிலான இயற்பியல், வேதியியல், உயிரியல், மின்னியல் சார்ந்த எளிய ஆய்வுகள் பல பயிற்சியில் செய்து காட்டப்பட்டன. பயிற்சி ஆசிரியர்கள் தங்களை முழுமையாக பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டு தேவையான விளக்கங்களை பயிற்றுநரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். பயிற்சியின் விளைவு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பயிற்சி ஆசிரியர்கள் கருத்தளித்தனர்.
நிகழ்ச்சியினை பேராசிரியர் பரமேசுவரன் அவர்கள் ஒருங்கிணைத் திருந்தார். நிறைவாக கல்வியியல் கல்லூரியின் முதல்வர், இத்தகு பயிற்சி மாணவர்களின் கல்விப் பணிக்கு சிறந்த படிக்கட்டாக அமையும் எனக்கூறி நன்றி பாராட்டினார்.
No comments:
Post a Comment