வீட்டுக்கொரு கழிப்பறை இருக்க வேண்டியதன் அவசியத் தையும், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகளையும் ஊர்ப்புற மக்களிடம் ஊரக வளர்ச்சி முகமை மூலம் பரப்புரை செய்ய உருவாக்கப்பட்ட விழிப்புணர்வுப் பாடல்.
இசைப்பாடல் - பாவலர் பொன்.கருப்பையா , புதுக்கோட்டை
வீட்டுக்கொரு கழிப்பறைதான்
ஏ அய்யா அம்மாமாரே
வேணுமுங்க அவசியமா
கட்டிடுவோம் வாங்க நீங்க
திறந்தவெளிப் பொட்டலத்தான்
தேடிப்போயி மலம் கழிச்சா
தீராத தொற்றுநோயும்
தேடிவரும் நம்மலைத்தான் --- வீட்டுக்கொரு
வாய்க்குள்ளே போறதெல்லாம்
ஏ அய்யா அம்மாமாரே
வயித்துக்குள்ளே தேங்கிடாமே
வெளியேவந்து ஆகவேணும்
காலைமாலை ரெண்டுவேளை
கழிவைவெளி யேற்றவேணும்
கலகலன்னு ஒடம்பிருக்கும்
கண்டபிணி ஓடிவிடும் - -- வீட்டுக்கொரு
பொழுதெல்லாம் அடக்கிவச்சு
ஏ அக்கா தங்கைமாரே
பொழுதுபட்டும் விடியுமுன்னும்
புதரைத்தேடிப் போறீகளே
தேக்கிவைக்கும் மலஜலத்தால்
தீங்குரொம்ப வெளையும்தானே
தீரும்ஒங்க துயரமெல்லாம்
கழிப்பறையைக் கட்டுனாலே --- வீட்டுக்கொரு
கூரைவீடோ ஓட்டுவீடோ
ஏ அய்யா அம்மாமாரே
குடியிருப்பின் வெளியேகொஞ்சம்
எடமிருந்தாப் போதுந்தானே
பஞ்சாயத்து ஆபீசுக்கு
கழிப்பறைன்னு கேட்டுப்போனா
பன்னெண்டாயிர ஊக்கநிதியில்
கழிப்பறையும் வருமேதானா --- வீட்டுக்கொரு
அஞ்சுக்கு மூனடியில்
ஏ அய்யா அம்மாமாரே
அழகாஒரு கழிப்பறையை
அமைச்சுவச்சு நீயும்பாரு
உருளைவடிவ உறைகளாலே
உலர்கழிவுத் தொட்டிபோதும்
ஒருதுளியும் நாத்தமின்றி
உரமாஅந்தக் கழிவும்மாறும் --- வீட்டுக்கொரு
குளக்கரையில் மலம்கழிச்சா
ஏ அண்ணந் தம்பிமாரே
கொசு கிருமி உருவாகி
கொல்லைநோயைப் பரப்பிடுமே
குடிநீரும் காத்தும்கெட்டு
கணக்கில்லாம தொல்லைதரும்
கவலைநீங்கி சுகமாவாழக்
கழிப்பறைதான் அடித்தளமே --- வீட்டுக்கொரு
சுத்தியுள்ள எடத்தையெல்லாம்
ஏ அய்யா அம்மாமாரே
சுத்தமாக வச்சிக்குவோம்
சுகவாழ்வு தானேவரும்
தூய்மைபாரத் திட்டத்தாலே
திறந்தவெளியில் மலம்கழிக்கா
மாவட்டமா புதுக்கோட்டையை
மாத்திடுவோம் வாங்கநீங்க -- வீட்டுக்கொரு
தன்னனன்ன தானே னன்னே
தானானே தானே னன்னா
தனனானே தானே னன்னன்னா
ஏஅம்மாமாரே தானானே
தானே தன்னன்னா
இசைப்பாடல் - பாவலர் பொன்.கருப்பையா , புதுக்கோட்டை
வீட்டுக்கொரு கழிப்பறைதான்
ஏ அய்யா அம்மாமாரே
வேணுமுங்க அவசியமா
கட்டிடுவோம் வாங்க நீங்க
திறந்தவெளிப் பொட்டலத்தான்
தேடிப்போயி மலம் கழிச்சா
தீராத தொற்றுநோயும்
தேடிவரும் நம்மலைத்தான் --- வீட்டுக்கொரு
வாய்க்குள்ளே போறதெல்லாம்
ஏ அய்யா அம்மாமாரே
வயித்துக்குள்ளே தேங்கிடாமே
வெளியேவந்து ஆகவேணும்
காலைமாலை ரெண்டுவேளை
கழிவைவெளி யேற்றவேணும்
கலகலன்னு ஒடம்பிருக்கும்
கண்டபிணி ஓடிவிடும் - -- வீட்டுக்கொரு
பொழுதெல்லாம் அடக்கிவச்சு
ஏ அக்கா தங்கைமாரே
பொழுதுபட்டும் விடியுமுன்னும்
புதரைத்தேடிப் போறீகளே
தேக்கிவைக்கும் மலஜலத்தால்
தீங்குரொம்ப வெளையும்தானே
தீரும்ஒங்க துயரமெல்லாம்
கழிப்பறையைக் கட்டுனாலே --- வீட்டுக்கொரு
கூரைவீடோ ஓட்டுவீடோ
ஏ அய்யா அம்மாமாரே
குடியிருப்பின் வெளியேகொஞ்சம்
எடமிருந்தாப் போதுந்தானே
பஞ்சாயத்து ஆபீசுக்கு
கழிப்பறைன்னு கேட்டுப்போனா
பன்னெண்டாயிர ஊக்கநிதியில்
கழிப்பறையும் வருமேதானா --- வீட்டுக்கொரு
அஞ்சுக்கு மூனடியில்
ஏ அய்யா அம்மாமாரே
அழகாஒரு கழிப்பறையை
அமைச்சுவச்சு நீயும்பாரு
உருளைவடிவ உறைகளாலே
உலர்கழிவுத் தொட்டிபோதும்
ஒருதுளியும் நாத்தமின்றி
உரமாஅந்தக் கழிவும்மாறும் --- வீட்டுக்கொரு
குளக்கரையில் மலம்கழிச்சா
ஏ அண்ணந் தம்பிமாரே
கொசு கிருமி உருவாகி
கொல்லைநோயைப் பரப்பிடுமே
குடிநீரும் காத்தும்கெட்டு
கணக்கில்லாம தொல்லைதரும்
கவலைநீங்கி சுகமாவாழக்
கழிப்பறைதான் அடித்தளமே --- வீட்டுக்கொரு
சுத்தியுள்ள எடத்தையெல்லாம்
ஏ அய்யா அம்மாமாரே
சுத்தமாக வச்சிக்குவோம்
சுகவாழ்வு தானேவரும்
தூய்மைபாரத் திட்டத்தாலே
திறந்தவெளியில் மலம்கழிக்கா
மாவட்டமா புதுக்கோட்டையை
மாத்திடுவோம் வாங்கநீங்க -- வீட்டுக்கொரு
தன்னனன்ன தானே னன்னே
தானானே தானே னன்னா
தனனானே தானே னன்னன்னா
ஏஅம்மாமாரே தானானே
தானே தன்னன்னா
2 comments:
அருமையான விழிப்புணர்வுப் பாடல் ஐயா
கருத்தளித்தமைக்கு நன்றி அய்யா
Post a Comment