Wednesday, November 25, 2015

இன்னுமா தணியவில்லை சீற்றம் ?

மழைத்தாயே...மன்னிப்பாயே.

மண்ணுலகைக் காக்கும் ஏ...மழைத்தாயே - உந்தன்  
கண்ணீரின்  சீற்றம் தனைத் தணிப்பாயே

வான்மழையே உன்னைநம்பி கால்பகுதி நிலமதிலே 
வாழும் மக்கள் வாழ்வ தனைச் சிதைக்காதே - வெள்ளம்
வந்ததெல்லாம் போதும் இன்னும் வதைக்காதே  

காடுகளை அழிச்சு அங்கே  ஆலைகளை அமைச்ச தப்பு
வீடுகளில் ஏசிசெஞ்சு வெளிக்காத்தைக் கெடுத்த தப்பு
சூடுஏத்தி  ஓசோன் குடையைச் சுக்குசசுக்காக்  கிழிச்ச தப்பு
பாடுபட்டப் பயிர்களையே பறிகொடுத்துத் தவிக்கிறோ மிப்ப   - மண்

நீர்வடியும் பாதையெல்லாம்  நிரவிவீடு  கட்டுன குத்தம்
தூர்வாராக் கம்மாயெல்லாம் தொழிற்பேட்டை யாக்குன குத்தம்
ஊர்முழுதும் குப்பையைக்கொட்டி உன்வழியைத் தடுத்த குத்தம்
சோர்ந்தபின்னே  உண ர்ந்துட்டோமே சோதிக்காம காத்திடு நித்தம்- மண்



4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உணர்ந்தால் போதுமா ஐயா
பரிகாரம் செய்வது எப்போது என்று
மழை கேட்கின்றது
நன்றி ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

தப்புக்கு தண்டனை...

ஸ்ரீமலையப்பன் said...

செய்துகொண்டிருக்கிறோம்... சேர்ந்து விதைக்கலாமா அய்யா...

சக்தி S said...

வலை தளம் கட்டமைப்பு அருமையாக இருக்கு தாத்தா...

Post a Comment