Wednesday, September 30, 2015

சுமையாகிப்போமோ சுகஊற்று?

சுமை  யென்று  நினைக்காதே முதியவரை -நீ
சுவை கொள்ளத்  சுகந்தன்னை  இழந்தவரை
சொந்த மெல்லாம்  நீயேயென்  றிருந்தவரை - வாழும் 
சொர்க்க மெனப்  போற்றிடுவாய் இறுதிவரை.

முந்நூறுநாள் வயிற்றில் சுமந்து உன்னை - நல்
முத்தாகக் காப்பாற்றி வளர்த்த அன்னை
மூப்பினால் வயதாகித் தளர்ந்த பின்னே -ஒதுக்கி
முதியோர் இல்லந் தன்னில் சேர்ப்பதென்னே?

தந்தையின் சொத்ததினில் உரிமை கொண்டாய் - அருந்
தாயவள்    கருணையதால்  வளர்ந்து  நின்றாய்
தாங்கிடும் விழுதெனவே   நினைத் திருந்தார்-உற்ற
தளர்ச்சியைப் போக்கிட  நீஏன்  மறந்தாய்?

பட்டினி    கிடந்  துனக்குப் பாலூட்டி-கடும்
பத்தியம்    இருந் துனது நோய்போக்கிப் 
பாங்குடன்   நல்வாழ்வில் உனை அமர்த்தி - அவர் 
பரிதவித் தலைதல் பாவம் நெஞ்சிலிருத்து. 

முறுக்குடன்  நீயும்  இன்று விளங்கிடலாம்- நாளை
முதுமையும் உனை வந்து  முடக்கிடலாம்
முன்கையின்  வழிநீளும் முழங்கையைப் போல் -முறை
முழுதை யும்உன்  பிள்ளை தொடர்ந்திடுமே.

-- அக்தோபர் முதல் நாள் உலக முதியோர் நாள்.

Monday, September 28, 2015

மு.கோபி சரபோஜி: உன்னில் இருந்து தொடங்கு!

மு.கோபி சரபோஜி: உன்னில் இருந்து தொடங்கு!பெ்ண்கள் தங்களின் ஆற்றல் வெளிப்பாட்டிற்குத் தடையாய் இருக்கும காரணிகளை தாங்களே உணர்ந்து  ஒதுக்கி, அறவியல் மனப்பான்மையோடான செயல்களில் ஈடுபடத் தொடங்கினால் பெண்ணின் பெருமை போற்றப்படும். எதார்த்தங்களை வடித்துள்ள கட்டுரை. வாழ்த்துகள்.

Wednesday, September 23, 2015

விறுவிறுப்பேறும் வலைப்பதிவர் சந்திப்பு 2015

புதுக்கோட்டையில் 11.10.2015 அன்று நடைபெற உள்ள வலைப்பதிவர் திருவிழாவில்  தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து ஐந்து பிரிவுகளிலான மின்-தமிழ் இலக்கியப் போட்டிகள் நடத்தி, அப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு உரூபா 50000 த்தை வழங்கியும் பேருதவி செய்துள்ளது  நமக்கெல்லாம் பெரு மகிழ்வினை அளித்துள்ளது.

த.இ.க. தமிழ் இலக்கியப் போட்டி பற்றிய செய்தியினைத் தனது தளத்தில் வெளியிட்டுள்ளது. 

போட்டிகளும், விழாவும் சிறப்புற அமைய விழாக்குழு மட்டுமல்ல இயன்ற வழிகளிலெல்லாம் வலைப்பதிவர்கள் தங்களின் பேராதரவினை நல்குவர் என்னும் நம்பிக்கை நமக்குள்ளது.  இணையவழி கணித்தமிழுக்கு உரமூட்ட இணையுங்கள் இன்றே.

சும்மா அதிரப்போகுதுல்ல..

அக்டோபர் 11ல் அலறப்போகுது புதுக்கோட்டை..
 உலகளாவிய  வலைப்  பதிவர்கள்கள்  ஒன்றாகச் சங்கமிக்கும்  வலைப்பதிவர் திருவிழா 

ஆலங்குடி சாலை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் ...  

எதுமாதிரியும் இல்லாம ஒரு புதுமாதிரியா நடக்க இருக்கும் விழா...


.
என்னோட படைப்பை மிஞ்ச யாராலும் முடியாதுன்னு கட்டுரை. கவிதைகள் என ஐந்து வகை  மின் தமிழிலக்கியப் போட்டிகளில் முனைப்பாக பங்கேற்கும்  வலைப்  படைப்பாளிகள்...

கண்களையும் கருத்தையும் கவரக்கூடிய ஓவியக் கவிதைக் கண்காட்சி...

நல்ல தமிழ் நூல்கள் வெளியீடு...

வெல்லத் தமிழறிஞரகளின் வாழ்த்துரை...

முதல்நாளே வரும் பதிவர்களுக்கு தங்குமிட வசதி...

அனைத்துப் பதிவர்களுக்கும் வழங்கப்பட உள்ள அழகிய பதிவர் கையேடு...

முற்பகல். பிற்பகல் இடைவேளையில் சோர்வகற்ற சுவை நீர்..

நண்பகலில் நாவினிக்க அறுசுவை விருந்து...

மின் தமிழிலக்கியப் போட்டி வெற்றியாளர்களுக்கு தகைமைசால் தமிழ்ச் சான்றோர்களால் 50000 உரூபாயுடன்  வெற்றிக் கேடயங்களும் பரிசளிப்பு 
என அதிரப் போகுது வலைப்பதிவர் திருவிழா... 
என்ன இப்பவே புறப்புட்டாச்சா... வாங்க சந்திப்போம்.

Tuesday, September 22, 2015

மு.கோபி சரபோஜி: கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?

மு.கோபி சரபோஜி: கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?

இயற்கையை எதிர்த்து வாழும் மனிதா மனிதா -இனி

இயற்கையோடு இணைந்து வாழு இனிதாய் இனிதாய்.கண் விற்றுச் சித்திரம் வாங்கும்  கயமை பற்றிய கட்டுரை அருமை. வெல்க..

Tuesday, September 15, 2015

காசநோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
புதுக்கோட்டை மாவட்ட காசநோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயக்க செயற்குழு முனைவர் ராஜ்குமார் அவர்கள் தலைமையில் இன்று கூடியது.
அக்சயா-ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன்,,மாவட்டச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, தா.சிவராமகிருஷ்ணன், முருகேசன். கந்தசாமி, வினோத், அருள், விசயலெட்சுமி ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட கிராமப்புறங்களில் காசநோய்ப் பாதிப்பாளர்கள் நலன் பேணுதல் பற்றி விவாதித்தனர்.

காச நோய் பாதிக்கப்பட்டவர்களின்  குடும்ப வருவாய் பெருக்கத் திட்டமாக, 

அவர்களுக்கு சிறுதொழில் தொடங்க உதவுதல். 

அதற்கான வல்லுநர்களைக் கொண்டு பயிற்சியளித்தல், 

அவர்களின் செய்பொருள்களைச் சந்தைப்படுத்தல்  முதலானவை பற்றி பேசப்பட்டது.

 அக்டோபர் முதல் வாரத்தில் சிறுதொழில் முனைய விரும்புவோர்க்கு  பயிற்சியளிப்பது எ்ன்றும் திறனடைவிற்கேற்பக் கச்சாப் பொருள்களை அடுத்த கட்டமாக  வழங்குவது என்றும் முடிவாற்றப்பட்டது.

புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவ மனையில் தொடர்ந்து காச நோய்க்கான சிகிச்சை மேற்கொள்வோர்க்கு காசநோய்ப்பிரிவு இணை இயக்குநர் அனுமதி பெற்று, ஊட்டச்சத்து பயறுவகை பாரம்பரிய உணவுத் தானியப் பொட்டலங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

Monday, September 14, 2015

வலைப்பதிவர்களே  உங்கள் படைப்புகளுக்கான மகுடங்கள் காத்திருக்கின்றன. விரைந்து படைப்புகளை அனுப்பி மகுடங்களைச் சூடிக்கொள்ள வாருங்கள்.
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000

ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான

மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------

போட்டிக்கான தலைப்புகள் :

வகை-(1) கணினியில் தமிழ் வளர்ச்சி - கட்டுரைப் போட்டி
கணினியில் தமிழ் வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி
சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி
பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு...

வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு...

Wednesday, September 9, 2015

கரந்தை ஜெயக்குமார்: புதுகை அழைக்கின்றது

கரந்தை ஜெயக்குமார்: புதுகை அழைக்கின்றத.

தமிழ்நாட்டிலுள்ள வலைப்பதிவர்களையெல்லாம் தயக்கமின்றி புதுக்கோட்டையில் நடக்கவுள்ள வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள தேன்மொழிவில் கரந்தை செயக்குமார் அவர்களின் அழைப்பு அமைந்து வருகிறது. எதிர்பார்ப்பிற்கு மேலும் வலைப்பதிவர் கலந்து கொண்டு ஒரு புதிய வரலாற்றினை உருவாக்குவர் என்றே எண்ணுகிறேன்.

Friday, September 4, 2015

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
வலைப்பதிவர்கள் விரைந்து தங்கள் வருகையினைப் பதிவு செய்து, மலருக்கு விளம்பரங்கள் கொடுத்து  வலைப்பதிவர் திருவிழாவினைச் சிறப்புறச் செய்யவும்.