Thursday, December 22, 2016

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்.

Image may contain: 7 people, people standingபுதுக்கோட்டை மவுண்ட்சீயோன் பொறியியல் கல்லூரியில் 18.12.2016 அன்று கணினித் தமிழ்ச் சங்கம் நடத்திய இணையத் தமிழ்ப் பயிற்சி முகமையில் LK Institute of Skill Development  நிறுவனம் தயாரித்து அளித்த கணினித் தமிழ்க் கையேட்டினை கவிஞர் தங்கம் மூர்த்தி வெளியிட அதனை கவிஞர் கீதாவும்ஈ பாவலர் ்பொன்.கருப்பையாவும் பெற்றுக் கொண்டனர்.

முகாம் தொடக்கத்தில்  பாடுவதற்காக பாவலர் பொன்.க எழுதி  இசையமைத்திருந்த பாடல், தொடக்கம்  திட்டமிட்ட  நேரத்தில் தொடங்கப்பட இயலாச் சூழலில் அப்பாடல் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் அந்தப் பாடல் இதோ...

புதிய பொலிவு பெறுகு தெங்கள் இனிய தமிழ்மொழி
புவியைச் சுருக்கி இணைக்கு திப்போ இணையத் தமிழவழி
கணினித் தமிழ்ச் சங்கம் காட்டும் பயிற்சி  யின்வழி
கடல் கடந்து விண்ணைத் தொடுது கன்னித் தமிழ்மொழி       - புதிய

மின்னஞ்சல் வழியில் செய்தி தமிழில் அனுப்புவோம்
மேன்மையான நடப்பைப் பிறர் அறிய வழங்குவோம்
வலைத் தளங்கள் உருவாக்கி வளமை பெருக்குவோம்
வகைவகை யாய்ப் படைப்பு களை வழங்கி மகிழுவோம்       - புதிய

முக நூலைத் தொடங்கித் தரவைப் பதிவு செய்யலாம்
முனைப் புடனே  செய்திப் படங்கள் ஏற்றிக் காட்டலாம்
நானி  லத்து மனிதர் களையும்  நண்ப  ராக்கலாம் 
நட்பு வட்டத்  தோடு செய்தி பகிர்ந்து கொள்ளலாம்    -- புதிய 

வலை யொளியில் காணொளி நல் காட்சி ஏற்றலாம்
உலகம் முழுதும் பார்த்தவரின் விருப்பமறியலாம்
விக்கி  பீடியாவில் தமிழில் கருத்தை எழுதலாம்
விரும்பும் நூலை பிடிஎப்பில் படித்து மகிழலாம்            - புதிய

திறன்  செயலிப் பேசிகளில் திரட்டி ஏற்று  வோம்
தேவைப் படும் வகையியல திறந்து பயன் படுத்துவோம்
கணினி வழி வன்மு றைகள் பரவுதல் தடுப்போம்
கடவுச் சொல்லை கமுக்க  மாக மூடியே வைப்போம் - புதிய 
Image may contain: one or more people and indoor

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இணையம் பற்றிய அருமையான பாடல் ஐயா
தவிர்க்க இயலாத காரணங்களால் அந்நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை ஐயா.அதனால் தங்களைச் சந்திப்பதற்கு உரிய வாய்ப்பினை இழந்துவிட்டேன்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல் ஐயா... வாழ்த்துகள்...

Bagawanjee KA said...

இசையமைத்திருந்த பாடல் என்றால் அதையும் பகிரலாமே அய்யா!

Post a Comment