இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இந்தோனேசியா சுமத்ரா பகுதியில் 8.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளை அதிர்வுக்குள்ளாக்கி, அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
2004 திசம்பர் 26ல் ஏறத்தாழ 2.5 இலக்கம் மக்களையும் உடைமைகளையும் அழித்த ஆழிப்பேரலையின் தாக்கம், மக்கள் மனதை விட்டு அகலாத நிலையில் இத்தகு இயற்கைச் சீற்றம், பயம் கலந்த விழிப்புணர்வினைத் தூண்டியுள்ளது.
நோய் நாடுமுன் நோய் முதல்நாடிட இ யற்கை மனிதருக்கு நடத்தும் எச்சரிக்கைப் பாடம் இது. இயற்கையைச் சீற்றம் கொள்ளச்செய்யும் மின்அணுக் கழிவுகளால் சுற்றுச் சூழலை மாசு படுத்திக் கொண்டிருக்கும் நாம் பயந்து ஆகப் போவது ஒன்றுமில்லை.
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை என்னவாகும் என வள்ளுவப் பெருந்தகையின் வாக்கினை மறந்ததன் விளைவு இது. இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் ஆற்றலும், அழிவுகளிலிருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகளும் இன்றையச் சூழலில் உள்ளது ஆறுதலான ஒன்று. இனியாவது சுற்றுச் சூழல் காத்து இத்தகு பேரிடர் மீண்டும் தொடராது மேலாண்மைச் செயல்களை மேற்கொள்ளுவோமே. பாவலர் பொன்.க. புதுகை.
No comments:
Post a Comment