Sunday, April 7, 2013

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
               07.04.2013 ஞாயிறு மாலை புதுக்கோட்டை பாரதி பாலபவனத்தில் புதுக்கோட்டை கவிஞர் மன்றத்தின் திங்கள் கூட்டம் “ஆனந்தசோதி“ திங்களிதழின் ஆசிரியர் கவிஞர் மீரா.சுந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கவிஞர் வீ,கே.கஸ்தூரிநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார். கவிஞர் மன்றத் தலைவர் நிலவை பழனியப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

               பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் “ மாறலைன்னு சொன்னதிங்கே யாருங்க?“ எனும் பாடலுடன் கவியரங்கத்தைத் தொடங்கி வைத்தார்.
                                                                பாடல்
மாறுமுன்னு சொன்னாகளே மண்ணெல்லாம் பொன்னாக
மணக்க வாக்குத் தந்தாகளே மல்லிகைப்பு செண்டாக
மறக்கணுன்னு நெனைச்சோமே மண்டியிட்டுக் கேட்டதெல்லாம்
மறக்க முடியலையே மண்ணும் பொன்னா மாறலையே

மாறலைன்னு சொன்னதிங்கே யாருங்க? -எல்லாம் 
மாறிப்போச்சு  மேலும் கீழும் தானுங்க
மணக்கலேன்னு சொன்னதிங்கே யாருங்க? -ஊழல்
மலிஞ்சுபோயி மணக்கு தெங்கும் தானுங்க                    -- மாறலைன்னு

பாலும்    தேனும்    இங்கேஆறா    ஓடணுன்னு                                                                                                  பாடுபட்டக்        காலம்மாறிப்     போச்சுது
பாட்டாளி       தாகத்துக்கும்     பச்சத்தண்ணி      கூடஇப்ப                                                                             பன்னாட்டு     மூலதனம்       ஆச்சுது
சேத்துல      வெளைஞ்சதைச்    சோத்துக்கு   மாத்துகிற                                                                        பாத்தியமும் அந்நியருக்     காச்சுது
ஏத்துன    வெலவாசி   எறங்குமா என்பதெல்லாம் 
காத்துல    பறந்தபஞ்சு      ஆச்சுது                                           -- மாறலைன்னு

மதுக்குடிச்சா   மதியழிஞ்சு    மானங்கெட்டுப்     போகுமுன்னு
மதுஒழிக்கப்    போராடுன     நெலைஒன்னு
மானங்கெட்ட   வருமானத்தால்   மதுக்கடைங்க   பெருகவச்சு
மாணவனும்    கெட்டுப்போன        விளைவென்ன?
வெள்ளரிக்கா  வித்தகாசும்    வெளிநாடு      போச்சுதுன்ன
வீக்கம்வரும்     பணத்துக்குன்னு     சொன்னாங்க
வெளிநாட்டு     வங்கிகளில்     நம்நாட்டுக்   கொள்ளைப் பணம்
கறுப்புவெள்ளையா  மாறிக்கெடக்கு   பாருங்க              --- மாறலைன்னு

கார்கில்லு     சவப்பெட்டி    காமன்வெல்த்    ஆதர்சு
ஸ்பெக்ட்ரம்  நிலக்கரின்னு   ஊழல்கள்
கெணறுவெட்டக்   கிளம்பிவந்த      புதம்விட்ட   காத்தைப்போல
கிரானைட்   ஹெலிகாப்டர்ஊழல்  ரொம்ப நாறுது
வாய்மையே   வெல்லுமென்னும்   வாசகத்தின்   கீழிருந்து
ஆளுவோர்கள்   அறவழி்க்கு   மாறணும்
வாழும்மக்கள்    வறுமைதீர    வாய்ப்பான   செயலாற்றி
வளமாக     நாட்டைமுன்        னேற்றணும்

மாறிப்போகும்   எல்லாம்அப்பத்     தானுங்க - மக்கள் 
மனசுவச்சா          மாற்றம்          உருவாகுங்க 

பாடலைத் தொடர்ந்து கவிஞர்கள் பலரின் கவிதை ஊர்வலம் அரங்கேறியது.
கவிஞர் மன்றத்திற்கென வலைப் பக்கம் தொடங்க முடிவாற்றப் பட்டது.
முனைவர் சு.மாதவன் அவர்கள் நன்றி கூற கவிதை ஊர்வலம் நிறைவுற்றது.

No comments:

Post a Comment