புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காசநோய்ப் பிரிவில் 17.09.2013 அன்று, புதுக்கோட்டை மாவட்டக் காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின் சார்பில், நாள்தோறும் காசநோய் சிகிச்சை பெற்று வரும் காசநோயாளிகளுக்குப் பயறு வகைச் சத்துணவு தினமும் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
துணை இயக்குநர் ( காசநோய் ) மருத்துவர் எஸ்.ஆர். சந்திரசேகர் அவர்கள் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
மாவட்டக் காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத் தலைவர் திரு.ஆர்.இராஜ்குமார், மாவட்டச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, செயற்குழு உறுப்பினர் தா.சிவராமகிருஷ்ணன், வசந்தா ஆகியோர் நோயாளிகளுக்குப் பயறு வகைச் சத்துணவினை வழங்கினர்.
சிகிச்சை அமைப்பாளர் திருமதி மணிமேகலை மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் திரு அலெக்ஸ் பாண்டியன் அவர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

No comments:
Post a Comment