Wednesday, February 26, 2014

சுதர்சன் கல்வியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் நாள்.

பிப்பிரவரி 28 தேசிய அறிவியல் நாளையொட்டி 26.02.2014 அன்று புதுக்கோட்டை சுதர்சன் கல்வியியல் கல்லூரியில் அறிவியல் மனப்பான்மை வளர என்னும் தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா கருத்துரையும் எளிய அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளும் முறைகளும் பற்றிய செயல் விளக்கங்கள் அளித்தார்.

கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு ரெங்கராசன் அவர்கள் தலைமையேற்று ஆசிரியர்கள் செயல்வழிக் கல்வியினை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தைக்
கூறினார்.

கருத்துரையாற்றிய பாவலர் பொன்.க. பாடத்திட்டத்திலும் கற்பித்தலிலும் புதிய உத்திகளை ஆசிரியர்கள் மேற்கொண்டால்  பள்ளிவயதில் இடைநிற்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என்றார்.

செயல்வழி கற்பித்தல் மாணவர்களைத் தொடர்ந்து கற்றலில் ஈடுபடச் செய்யும். ஒவ்வொரு  ஆசிரியரும் கற்பித்தல் துணைக் கருவிகளைப் பயன்படுத்துதலும்  மாணவர்களை  செய்து பார்க்க வாய்ப்பளிப்பதும்  அவர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாக உருவாக்கும் எனக் குறிப்பிட்டார்.

அறிவியல் மனப்பான்மை வளர, ஆக்கப் புர்வமான செயல்கள் பெருகும். அறிவியலை ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தினால் நாட்டின் சமூக, பொருளாதார நிலை மேம்படும் என்பதை வலியுறுத்திய அவர் செலவில்லாத, குறைந்த செலவிலான கற்பித்தல் துணைக்கருவிகளைத் தயாரிக்கும் முறைகளைக் கல்வியியல் மாணவர்களுக்கு செயல்விளக்கமாகச் செய்து காட்டினார்.

ஏறத்தாழ மூன்றுமணிநேரம் நடந்த இக்கருத்தரங்கில்  பேராசிரியர்களும் கல்வியியல் மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்றுத் தாங்களாக முன்வந்து சில ஆய்வுகளைச் செய்தமை பாராட்டிற்குரியதாக இருந்தது..

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆய்வுகள் தொடரட்டும் ஐயா... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

மகிழ்நிறை said...

அய்யா எப்படி எல்லா துறையிலும் கலக்குறீங்க !!
பகிர்ந்தமைக்கு நன்றி

மணிச்சுடர் said...

பல்துறை அறிவின் நுகர்ச்சி ஆவலால்தான்....

கா.மாலதி. said...

ஐயா வணக்கம் ஓய்வு தங்களைப்பர்த்து ஓடிவிடுகிறது பகிர்விற்குநன்றி.

Post a Comment