தைத்திங்கள் முதல்நாளே தமிழருக்குப் புத்தாண்டு
தமிழ்ப்பண் பாட்டோடு மகிழ்ந்துநீ கொண்டாடு -- தைத்திங்கள்
ஞாலத்தின் முதல்தொழிலாய் வேளாண்மைத் தனைக்கொண்டு
காலத்தை அதன்வழியே வகுத்தானே நம்தமிழன் ஆடிப்பட்டம் தேடி விதைத்து மார்கழியில மகசூல்கண்டு கூடிக்களிக்கும் நாளாய்க் கொண்டானே தைமுதல்நாளை
-- தைத்திங்கள்
சுழல்கின்ற புவிசெழிக்கச் சூரியனை முதன்மை கொண்டான்
சூரியவீதியில் தங்கும் உடுக்கள் பன்னிரண்டு கண்டான்
சுறவம்முதல் சிலைஈறாய்ச் சுழன்றிடும் ராசிகள் பெயரைச் சூட்டியே திங்களை வகுத்துச் சுறவத்தைத் தைமுதலென்றான்
-- தைத்திங்கள்
கார்கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில் என
காலநிலைக் கேற்பபொழுதைப் கணக்காகப் பகுத்து வைத்தான்
வெயில்மழை முன்பனி கடந்து பின்பனியின் விடியல் பொழுதில்
விளைந்ததை இயற்கைமூல வெய்யோன்முன் படைத்தநாளே

3 comments:
சிறப்பான வரிகள் ஐயா...
வாழ்த்துக்கள்...
அருமை ...
உங்கள் குரலில் கேட்க ஆசை
பாராட்டுகளுக்கு நன்றி.
Post a Comment