புதுக்கோட்டை மச்சுவாடி திருவள்ளுவர் நற்பணி மன்றத்தின் 16ஆம் ஆண்டு விழா 19.01.2014 அன்று வெள்ளி அரங்கில் நடைபெற்றது. மாலை நடைபெற்ற மக்கள் கலைவிழாவில் “பாரதிகலைக்குழுவினர்” வழங்கிய மாத்தியோசி பல்சுவை நிகழ்ச்சியினை பாவலர் பொன்.கருப்பையா, தான் எழுதி இசையமைத்த “ தைத்திங்கள் முதல்நாளே தமிழருக்குப் புத்தாண்டு” மற்றும் ”திருவள்ளுவர்” பற்றிய பாடல்களைப் பாடி நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்தார்.
வள்ளுவரே... வள்ளுவரே .. இசைப்பாடல்
உலகுக்கு உயிர்கொடுக்க உதித்தஒரு ஆதவன்போல்
உயர்திருக் குறளைத்தந்த பாவலரே - உங்கள்
வழியி்ல் இந்தப் புவிசுழலும் வல்லவரே
வள்ளுவரே... திருவள்ளுவரே
அறம்பொருள் இன்பமென்று அழகியமுப் பாலைத் தந்தாய்
அகிலத்தில் வாழும்மாந்தர் அனைவருக்கும் பொதுமை சொன்னாய்
அன்புடனே அறிவும்ஓங்க அதிகாரம் பலவும் செய்தாய்
ஆள்வோர்க்கும் வாழுவோர்க்கும் அரியநெறிகள் ஆக்கித் தந்தாய்
வள்ளுவரே.... திருவள்ளுவரே
இயங்கிடும் உலகம் என்றும் ஏரின்பின்னே நடக்குமென்றாய்
இயலாத தொன்றுமில்லை முயற்சிசெய்யக் கிடைக்குமென்றாய்
ஈதல் இசைபடவே வாழ்ந்திடவும் வழியைச்சொன்னாய்
ஈடில்லா இல்லறத்தின் மேன்மைஅன்பு அறத்திலென்றாய்
வள்ளுவரே...திருவள்ளுவரே
ஏற்றநல் அறம்புரிய இனியபொருள் விளையுமென்றாய்
ஏகாந்த வீடுபேற்றின் இறுதிநீக்கி இன்பம் வைத்தாய்
இன்பத்துப் பாலதிலே எத்தனையோ நுட்பம் வைத்தாய்
என்றும்குறள் வழிநடப்போர் ஏற்றம் வாழ்வின் அமையுமென்றாய்
வள்ளுவரே... திருவள்ளுவரே.

2 comments:
ஆகா... ரசிக்க வைக்கும் பாடல்... நன்றி...
வாழ்த்துக்கள்...
நன்றி அய்யா.
Post a Comment