Sunday, March 30, 2014

வீதி இலக்கியக் கூட்டம் மார்ச் -2014

           புதுக்கோட்டை “வீதி” இலக்கியக் கூட்டம் இன்று 30.03.2014 முற்பகல் புதுக்கோட்டை ஆக்சுபோர்டு சமையல் கலைக் கல்லூரியி்ல் சிறப்பாக நடைபெற்றது. 

           புலவர் மா.நாகூர்  அவர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்க, முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் முன்னிலையேற்றார்.                           திரு குருநாதசுந்தரம் அவர்கள் வரவேற்றார்.

“கரிசல் தவம்” என்னும் தண்ணீர் தட்டுப்பாடு பற்றிய சிறுகதையினை திரு குருநாதசுந்தரம் படைத்து அளிக்க, அக்கதை பற்றிய கருத்துப் பகிர்வு நடந்தது. சிறுகதையின் சிறப்புகளும் முரண்களும் விவாதிக்கப்பட்டன..

“நான்சியும் நானும்” என்னும் திருமதி வள்ளிக்கண்ணு அவர்களின்   சிறுகதையும் வாசிக்கப்பட்டது.  
 படைப்பாளிகள் பாராட்டப் பட்டனர்.

 புலவர் மா.நாகூர்அவர்களின்  “ என்ன செய்வது?” எனும் கவிதையும், கவிஞர் ஸ்டாலின் சரவணன் அவர்களின் “எச்சில்”  எனும் கவிதையும் வீதி யில் பகரப்பட்டு பாராட்டப் பட்டது.

கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் “இலவசங்கள் யாருக்காக?” என்னும் நிகழ்கால சமூகஅரசியல் தாக்கங்களோடு கூடிய கட்டுரையினை படைத்தளித்தார். பதிவு பாராட்டிற்குரியது

கவிஞர் மு.கீதா அவர்கள் அருந்ததிய மக்களின் அவலம் பற்றிய தனது கவிதையோடு , தான் படித்த மலர்வதியின் “தூப்புக்காரி” மற்றும் பாமாவின் “கருக்கு” ஆகிய புதினங்களையும் ஒப்பிட்டு விளிம்பு நிலை மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டிய கருத்தினைப் பதிவு செய்தார்.
ஒப்பீடு சிறப்பாக இருந்தது.

முனைவர் துரைக்குமரன்அவர்கள்  யோசி, ஏழைதாசன், புதுகைத் தென்றல், காக்கைச் சிறகினிலே, ஆனந்தசோதி, இனிய உதயம், ஆகிய திங்களிதழ்களையும், திண்ணை, பதிவுகள், அதிகாலை, வல்லினம், தங்கமீன், ஊடறு, கவிதைச் சங்கமம், முத்துக்கமலம் முதலிய இணைய இதழ்களையும் அறிமுகம் செய்தார்.

நிறைவாக அனைத்து நிரல்களிலும் கலந்து கொண்டவர்களுக்கும் , படைப்புகள் அளித்தவர்களுக்கும் முனைவர் துரைக்குமரன்அவர்கள்  நன்றி கூறினார்.

4 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அய்யா. இது வெளியிட அல்ல,
தங்களின் தனிப்பட்ட கவனத்திற்கு மட்டும் -
அய்யா தூப்புக்காரி நாவலாசிரியர் மலர்வதி.
அன்பு கூர்ந்து திருத்திவிடுங்கள்.

மணிச்சுடர் said...

திருத்தத்திற்கும் ஆலோசனைக்கும் நன்றி.

Geetha said...

நேரம் போனதே தெரியவில்லை .செவிக்கு உணவாய் தமிழமுது









ந்

Kasthuri Rengan said...

அய்யா அருமையான பதிவு ... நன்றி
வாழ்த்துக்கள்

Post a Comment