14.02.2015 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 11ஆவது புதுக்கோட்டை மாநாடு, நகர் மன்றத்தில் நடைபெற்றது. அம்மாநாட்டில் அன்றே எழுதி அப்போதே இசையமைத்துப் பாடிய பாடல் இது.
ஆத்துக்குள்ளே நீரெடுத்து...
அக்கரையில் மணலெடுத்து
அன்பையதில் குலைச்சு
கலைகள் செஞ்சோமே - இப்போ
ஆறுமில்லே நீருமில்லே
அதிலாடும் மீனுமில்லே
ஆசைப்பட்ட இயற்கை வளம் என்னாச்சு? - அட
அத்தனையும் அந்நிய முதலை தின்னாச்சு
--- தன்னனன்னே
ஏரிக்குள்ளே நீரெடுத்து...
எங்கும்வய வௌயவச்சு
எட்டுஊரு பசியப்
போக்கச் செஞ்சோமே - அந்த
ஏரிக்குள்ளே நீருமில்லே
ஏரியோட கரையுமில்லே
எங்கும் பெரும் கட்டடமா நின்னாச்சு - நம்ம
ஏர்உழவு பொழப்பு இப்ப மண்ணாச்சு
--- தன்னனன்னே
காட்டுக்குள்ளே மரம்வளர்த்து...
கண்கருத்தா உயிர்வளர்த்து
காலமெல்லாம் மழையும்
மருந்தும் கண்டோமே - அந்த
காடழிஞ்சு மழையுமில்லே
காயம்காக்க மருந்துமில்லே
கரியைக் கக்கும் ஆலைஎங்கும் ஆயாச்சு - இப்பக்
காட்டு விலங்கும் ஊரைநோக்கி வந்தாச்சு.
--- தன்னனன்னே
பாறையில கல்லெடுத்து....
பக்குவமா சிற்பம்செஞ்சு
பழங்காலப் பெருமை
சொல்லி நின்னோமே - அந்தப்
பாறைகளை ஒடச்செடுத்துப்
பளிங்குகளா மாத்திஇப்பப்
பலபேரு அதிபதியா ஆனாங்க - நாம
பள்ளத்தில் படர்ந்த ஊணாங்கொடியாப் போனோங்க
--- தன்னனன்னே
நஞ்சையில பயிர்வெளைச்சு...
நாட்டுக்கெல் லாம் படியளந்து
நாளும் நெல்லுக்
களஞ்சியமா நின்னோமே - அதன்
நடுவுலக் குழிபறிச்சு
மீத்தேனு எடுப்பதாலே
நம்மபசி நடுத்தெருவுல இப்போது - நாம
நாமாநிற்கும் நெலமை இனிமே எப்போது?
நாம் நாமாக நிற்பது எப்போது?
ஆத்துக்குள்ளே நீரெடுத்து...
அக்கரையில் மணலெடுத்து
அன்பையதில் குலைச்சு
கலைகள் செஞ்சோமே - இப்போ
ஆறுமில்லே நீருமில்லே
அதிலாடும் மீனுமில்லே
ஆசைப்பட்ட இயற்கை வளம் என்னாச்சு? - அட
அத்தனையும் அந்நிய முதலை தின்னாச்சு
--- தன்னனன்னே
ஏரிக்குள்ளே நீரெடுத்து...
எங்கும்வய வௌயவச்சு
எட்டுஊரு பசியப்
போக்கச் செஞ்சோமே - அந்த
ஏரிக்குள்ளே நீருமில்லே
ஏரியோட கரையுமில்லே
எங்கும் பெரும் கட்டடமா நின்னாச்சு - நம்ம
ஏர்உழவு பொழப்பு இப்ப மண்ணாச்சு
--- தன்னனன்னே
காட்டுக்குள்ளே மரம்வளர்த்து...
கண்கருத்தா உயிர்வளர்த்து
காலமெல்லாம் மழையும்
மருந்தும் கண்டோமே - அந்த
காடழிஞ்சு மழையுமில்லே
காயம்காக்க மருந்துமில்லே
கரியைக் கக்கும் ஆலைஎங்கும் ஆயாச்சு - இப்பக்
காட்டு விலங்கும் ஊரைநோக்கி வந்தாச்சு.
--- தன்னனன்னே
பாறையில கல்லெடுத்து....
பக்குவமா சிற்பம்செஞ்சு
பழங்காலப் பெருமை
சொல்லி நின்னோமே - அந்தப்
பாறைகளை ஒடச்செடுத்துப்
பளிங்குகளா மாத்திஇப்பப்
பலபேரு அதிபதியா ஆனாங்க - நாம
பள்ளத்தில் படர்ந்த ஊணாங்கொடியாப் போனோங்க
--- தன்னனன்னே
நஞ்சையில பயிர்வெளைச்சு...
நாட்டுக்கெல் லாம் படியளந்து
நாளும் நெல்லுக்
களஞ்சியமா நின்னோமே - அதன்
நடுவுலக் குழிபறிச்சு
மீத்தேனு எடுப்பதாலே
நம்மபசி நடுத்தெருவுல இப்போது - நாம
நாமாநிற்கும் நெலமை இனிமே எப்போது?
2 comments:
சிந்திக்க வேண்டிய வரிகளுடன் பாடல் அருமை ஐயா...
நாமாநிற்கும் நெலமை இனிமே எப்போது?
சிந்தனைக்கு உரிய வரிகள் ஐயா
Post a Comment