Saturday, January 31, 2015

விழைவும் விளைவும்

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
tpioTk; tpisTk;
r%f khw;wq;fis Kjd;ik Nehf;fkhff; nfhz;Nl ,yf;fpaq;fs; gilf;fg;gl;L tUfpd;wd.
      rq;f fhyk; njhl;L ,d;iwa etPd gilg;Gfs; tiu mt;tf;fhy kf;fspd; tho;f;if> njhopy;> fy;tp> gz;ghL> rKjha mikg;G> murpay;> ,tw;wpd; ,Ug;G. elg;Gg; Nghf;Ffisr; Rl;LtJk;> vl;lNtz;ba ,yf;Ffis ,ak;GtJkhfg; gilf;fg;gl;litNa ,yf;fpaq;fs;
      gilg;ghspfisf; $lf; fzf;fpl;L tplyhk;. mtu;fsJ gilg;Gfspd; vz;zpf;ifia mj;jid Jy;ypakhff; fzf;fpl;Ltpl KbahJ. mjpYk; Clf ntspr;rj;Jf;F tuhj gilg;ghspfisAk; mtu;fsJ gilg;GfisAk; fzf;fplNt KbahJ.
      nghOJ Nghf;F ,yf;fpag; ( ,d;GW ,yf;fpaq;fshk; ) gilg;ghspfisj; jtpu;j;J Mapuf;fzf;fhd gilg;ghspfs;> jhd; thOk; ,k;kz;Zyfr; r%fk; ca;aNt jq;fSila gilg;Gfisr; rpj;jpuk;> ghl;L;> ehlfk;> fl;Liu> rpWfij> neLq;fij > Gjpdk;> kuGf; ftpij> GJf; ftpij> FWq;ftpij> fbjk; vdg; gy;NtW tbtq;fsp;y; gilj;jspj;jpUf;fpwhu;fs;.
      ,d;iwar; #oypy;  ehnlq;Fk; eilngWk; Gj;jff; fhl;rpfspy;> nkhopkhw;W nra;ag;gl;l> gd;nkhop ,yf;fpaq;fs; cs;spl;l jkpopy; cs;s ,yf;fpaq;fs; ,yl;rf;fzf;fhd E}y;fshfg; gy;fpg; ngUfpAs;sikiag; ghu;f;Fk;NghJ ekf;nfy;yhk; ngUikahfNt ,Uf;fpwJ. Xiyr; Rtbfspy; ,Ue;j gz;il ,yf;fpaq;fs; ,d;W FWtl;Lfshf> kpd; E}y;fshf> mkufhtpaq;fshf> mopahj Xtpaq;fshf> moFw tyk;tUk; epiy ,yf;fpathjpfis neQ;R epkpu;j;jr; nra;Js;sJ.
     gpbglhj ngUik xUGwkpUf;fl;Lk;. ,j;jid gilg;GfSk; vjw;fhf? kf;fisg; gz;gLj;jmwk; tsu;f;f rkePjp kyu;j;j kj>,d>rhjp Ngjq;fsw;w rKjhak; cUthf;f.. gaq;fu thjq;fs; ePq;fp mikjp kyu ngz;zpak; kpspu xUikg;ghL Xq;f td;Kiw ePq;f njhopy;tsk; ngUf;fpLk; topKiw czu;j;j vdg; gy khw;wq;fis ekJ ,e;jpar; r%fj;jpy; Vw;gLj;jj;jhNd. Mdhy; tpioTf;Nfw;w tpisr;ry; ,y;iyNa Vd;?

 rpj;ju;fSk;NahfpfSk;                                               rpe;jidapy; QhdpfSk;                                  Gj;jNuhLVRTk;                                                      cj;jku;fhe;jpAk;                                               vj;jidNah cz;ikfis                                             vOjpvOjptr;rhq;f                                                   vy;yhe;jhd;gbr;rPq;f                                                  vd;dgz;zpf; fpopr;rPq;f? 

vd;w gl;Lf;Nfhl;ilahupd; tupfis ,d;iwf;Fk; epidj;Jg; ghu;f;f Ntjidjhd; kpQ;RfpwJ. vjdhy; ,e;epiy? vd;gijr; rpe;jpf;f Ntz;bAs;sJ.
   
   vOgJ tpOf;fhL fpuhkq;fs; epuk;gpa ek; ehl;by;> ,Ugj;njhd;gJ tpOf;fhL vOj;jwpNt ,y;yhj kf;fsplk; ,it Ngha;r; Nrutpy;iy vd;gNj elg;gpay;  cz;ik.
     vOj;jwpT ngwhj ghkuu;fis tpLq;fs;. efuq;fspy; thOk; gbj;jtu;fspy; vj;jid tpOf;fhL r%f mf;fiwNahL E}y;fis thq;fpg; gbf;fpwhu;fs;. md;whl ehl;L elg;Gfis mwpe;J nfhs;s ehNsLfs;$lg; gbf;Fk; gof;fkw;W ,Ug;gtu;fis ,e;j ,yf;fpaq;fs; vg;gb mirf;fg; Nghfpd;wd?
     
    mwpahik ,UspYk; %lek;gpf;iffspYk; %o;fp %r;Rj; jpzwp> fz;lNj fhl;rp nfhz;lNj Nfhyk; vd;W thOk;  kf;fis gilg;Gfs; tpopg;gilr; nra;ahj NghJ gilg;ghspfspd; Kaw;rp tpoYf;fpiwj;j ePuhfty;yth NghfpwJ.
     
     ehl;by; Mapuf;fzf;fhd tpopg;Gzu;T ,af;fq;fs; ,Uf;fpd;wd. khepyk; jOtpa ,yf;fpa mikg;Gfs; E}w;Wf;fzf;fpy; khtl;lk; NjhWk; Gytu;fs;. ftpQu;fs; ngau;fspy; vz;zw;w fofq;fs;> kd;wq;fs;> Nguitfs;> ,yf;fpa mikg;Gfspd; $l;lq;fs; ,aq;fpf; nfhz;Ljhd; ,Uf;fpd;wd. .
     
     mit Mz;LNjhWk;> fhyhz;L> jpq;fs; $l;lq;fs; elj;jpg;  gy E}y;fisAk; ntspapl;Lf; nfhz;Ljhd ,Uf;fpd;wd. Mdhy; elg;gnjq;Nf?  efuq;fspy;> xspnts;s muq;Ffspy;> ,yf;fpa MSikau;>murpay;thjpfs; jiyikapy; .. ngUe;jdf;fhuu; Kd;dpiyapy; ( E}iyg; ngw;Wf;nfhs;s) ftpQu;fs;! ( ehYtupf; ftpij vOjptpl;lhNy ftpQu;jhd; ) E}yhrpupau; cwtpdu; gq;Nfw;NghL Kbe;JNghfpd;w rlq;Ffshfj;jhd; ngUk;ghYk; epfo;fpd;wd.
    
    xU ,yl;rk;Ngu; trpf;fpd;w efukhapUe;jhYk; xU E}WNgu; mt;tpohtpy; $bdhy; mJ ngUtpoh. (mtu;fSk; me;efupy; cs;s gy ,yf;fpa mikg;Gfspd; nghWg;ghsu;fshf ,Ug;gu;)  ,g;gb efu;g;Gwj;jpy; ehd;F Rtu;fSf;Fs; ntspaplg;gLk; E}y; fpuhkj;J kf;fisr; nrd;wilfpwjh? mg;gbNa NghdhYk; me;E}y; gbf;fg;gLfpwjh? vd;gij ehk; rpe;jpf;f Ntz;Lk;.
   
    khepy> khtl;l> fpuhkg;Gw E}yfq;fs; ,aq;Ffpd;wd. ,yl;rf;fzf;fhd gy;Jiw E}y;fs; mq;F ,Uf;fpd;wd. mtw;iw vj;jidNgu; gbf;fpwhu;fs;? xU r%f mf;fiwAs;s E}yfuhapUe;jhy; mg;gFjpapy; cs;s rpy nry;te;ju;fisg; Gutyu;fshf;fp> xU gj;J ,UgJ Ngiu cWg;gpdu;fshf;fp itj;jpUg;ghu;          ( tw;GWj;jpj;jhd; ) 

mg;gFjpapy; cau;epiy> Nky;epiyg; gs;sp ,Ue;jhy; khzt cWg;gpdu;fspd; vz;zpf;if rw;Wf; $Ljyhf ,Uf;Fk;. Mdhy; ehs;NjhWk;  E}y;fs; ngw;Wg; gbg;gtu; vz;zpf;if FiwthfNt ,Uf;Fk;. khztu;fs; kjpg;ngz; vLf;fg; ghlE}y;fisg; gbf;fNt Neuk; NghjhjNghJ vq;Nf E}yf E}y;fisg; gbg;gJ?
    
     fy;tp epWtdq;fspy; eilngWk; ,yf;fpa tpohf;fSk; ngw;Nwhu; gq;Nfw;fhj rk;gpujha epfo;TfshfNt ,Uf;fpd;wd.
    
     khw;wk; Ntz;b kz;il fhaf; fhar; rpe;jpj;J vOjpa gilg;Gfs; khw;wk;ngw Ntz;ba ghku kf;fisr; nrd;W milahjNghJ vg;gb r%fk; khWk;?
    
     mg;gbahdhy; E}y;fshy; gad; ,y;iyah? vd;Dk; Nfs;tp vOk;. kpfg;ngupa r%f khw;wq;fSf;Ff; fhuzkhf gy mupa E}y;fs;jhd; ,Ue;jpUf;fpd;wd vd;gjpy; khw;Wf; fUj;jpy;iy. Mdhy; ,d;W gbj;jtu; tPl;by;$l gad;jUk; E}y;fs; ,y;iy. tuNtw;giw. gLf;ifaiw> cz;Zk; miw> fopg;giw> xJq;Fk; miw. nghUs;fisg; gJf;Fk; miw> G+ir nra;tjw;Fk; G+idfs; tsu;g;gjw;Ff; $l miwfs; ,Uf;Fk; tPLfspy; Gj;jf miw vd;W xd;W ,Ug;gjpy;iyNa.
   ,d;iwa ngUk;ghd;ik Nfspf;if Clfq;fSf;F ( rpd;dj;jpiu> tz;zj;jpiu )  kj;jpapy; kf;fis mwpthu;e;j E}y;fisg; gbf;fr; nra;tJ vd;gJ kpfg;ngupa rthyhf cs;sij r%f Mu;tyu;fs; xj;Jf;nfhs;fpwhu;fs;.

,jw;F ehk; vd;d nra;ayhk;.?
    
   E}y;fis tpUk;gp kf;fs; tuhjNghJ kf;fis Nehf;fp E}y;fisf; nfhz;L nry;y Ntz;Lk;.;.  ntspr;rj;jpw;F ntspr;rk; NghLtij tpLj;J ,Uis Nehf;fp tpsf;Nfe;jpr; nry;tJjhNd mwpTilik.
    
   Mk;. fiy ,yf;fpathjpfs; fpuhkq;fis Nehf;fp ntspr;rk; gha;r;r Kay Ntz;Lk;. gbj;jtu;fs;> gzk; gilj;jtu;>murpay; mjpfhuk; fpilj;jtu;fs; kj;jpapy; E}y;fis ntspapl;L> tpku;rpj;J  kypT tpsk;gu ntspr;rj;jhy; kfpo;tij tpl> ve;j mbj;jl;L kf;fSf;fhf E}y;fs; gilf;fg;gl;ldNth> me;j kf;fspilNa me;E}y;fisg;  Goq;f tpl Ntz;Lk;.
    
    vOgJ tpOf;fhL fpuhkq;fSf;Fk; ,g;gbr; nra;tJ ,aYkh? vdj; jpiff;fyhk;. xt;nthU ,yf;fpa mikg;Gk; xt;nthU jpq;fSk; Fiwe;jJ xU xd;wpaj; jiyefupyhtJ xU E}iy mwpKfk; nra;ayhNk.
   
    ek;khy; KbAkh vd;wpUe;jhy; ez;L$lr; rpupf;Fk;. Njbj;Njb E}y;fisg; gjpg;gpj;j c.Nt.rh.topapYk;> jiyapYk; NjhspYk; E}y;fisr; Rke;J fpuhkq;fs; NjhWk; kf;fisg; gbf;fr; nra;j elkhLk; E}yfkhf tpsq;fpa kd;dhu;Fb ,uhkhkpu;jk; nuq;fehjd; guk;giuapy; te;j ek;khy; Kbahnjd;why; NtW ahuhy;jhd; KbAk;?     
   
    kf;fs; $Lk; fpuhkrig> kfspu; Ra cjtpf;FOf; $l;lq;fSf;F fiy ,yf;fpa mikg;Gfs; nry;tJk;> $l;lr; rpwg;G miog;ghsu;fSf;Fg; nghd;dhil Nghu;j;Jtjw;Fg; gjpy; E}y;fisf; toq;Fk; gof;fj;ij cUthf;FjYk; gadspf;Fk;.
    
    E}ypd; fUj;J nghjpe;j vOj;Jfis kf;fNshL Ngrr; nra;a Ntz;Lk;.
    E}ypy; cs;s fUj;Jfisf; fiy tbtpy; fhl;rpg;gLj;jp> E}iy mwpKfk; nra;jhy; me;E}iyg; gbf;Fk; Mu;tk; mjpfupf;Fk;. ( njUf; $j;Jfis elj;jpj;jhNd gz;ila Guhz ,jpfhr E}y;fis ek;khSq;f gug;gp ,Uf;fhq;f) ,d;iwf;Fk;  GJikf; fUj;Jfisg; gug;g> fiy ,yf;fpa mikg;Gfs; ifahSk; rpwg;ghd cj;jp mJjhNd.
    
    E}y;fisg; gilg;gNjhL kl;Lk; flik Kbe;J tpLtjpy;iy. gilj;jtw;iwg; ghkuu;f;Fk; czu;j;jp gad; tpisar; nra;tJk;  gilg;ghspfspd; nghWg;Ng.   
   



Wednesday, January 14, 2015

தைத்திங்கள் முதல் நாளே..

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.

தைத்திங்கள்  முதல்நாளே  தமிழருக்குப்  புத்தாண்டு
தமிழ்ப்பண்     பாட்டோடு      மகிழ்ந்துநீ     கொண்டாடு

ஞாலத்தின்  முதல்தொழிலாய்   வேளாண்மை  தனைக்கொண்டு
காலத்தை   அதன்வழியே      வகுத்தானே      நம்தமிழன்
ஆடிப்பட்டம்  தேடிவிதைத்துப்   மார்கழியில்    மகசூல்கண்டு
கூடிக்களிக்கும்   நாளாய்க்   கொண்டானே    தைமுதல்நாளை                                                                                                                                 -- தைத்திங்கள்

சுழல்கின்ற   புவிசெழிக்கச்   சூரியனை   முதன்மை   கொண்டான்
சூரியவீதியி்ல்  தங்கும்   உடுக்கள்     பன்னிரண்டு    கண்டான்
சுறவம்முதல்  சிலைஈறாய்   சுழன்றிடும்   ராசிகள்  பெயரைச் 
சூட்டியேதிங்   களைவகுத்துச்   சுறவத்தைத்  தைமுதல் என்றான்                                                                                                                     -- தைத்திங்கள்

கார்கூதிர்  முன்பனி  பின்பனி  இளவேனில்  முதுவேனிலென
காலநிலைக்  கேற்பபொழுதைப்  பருவங்களாய்ப்  பகுத்து வைத்தான்
வெயில்மழைக்  குளிர்பனி  கடந்து  பின்பனியின்  விடியல்  பொழுதின் 
விளைந்ததை     இயற்கை   மூலவெய்  யோன்முன்  படைத்தானே                                                                                                                    -- தைத்திங்கள்

திங்களைப்  பகுத்திட்ட  திறன்மிகு   தமிழ்ச்  சான்றோர்
திடமுடன்  தமிழாண்டு  தொடங்கிய காலம்  சொன்னார்
தீங்கனிச்    சுவையுற்றாம்  திருக்குறள் மறையைத் தந்த
திருவள்   ளுவராண்டே  தமிழாண்டு  எனக்  கொண்டார்                                                                                                                                          -- தைத்திங்கள்

Tuesday, January 13, 2015

எது தமிழ்ப் புத்தாண்டு?

திருவள்ளுவர் ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டும்.

         1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர் கூடி தமிழருக்கு எது புத்தாண்டு என்பதை ஆய்ந்தனர்.

உலகில் அனைத்து நாடுகளும் கிரிகோரியன் ஆண்டினைத் தங்கள் புத்தாண்டாக ஏற்கவில்லை என்பது கண்கூடு.மதம், மொழி, இனம் சார்ந்தே அந்தந்த நாடுகள் தங்கள் புத்தாண்டை வகுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் தமிழன் மட்டும் ஏன் “பிரபவ” முதல்  “அட்சய” ஈறாக உள்ள, சுழற்சிக்கு ஒவ்வாத,  தமிழ்ப் பெயரல்லாத அறுபது ஆண்டுகளைத் தமிழாண்டுகளாகக் கொண்டாடும்  சாறுண்ணியாக தனித்தன்மையின்றி இருக்க வேண்டும் எனக் கருத்தூன்றி உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஆக்கித் தந்த அறிவாசான் திருவள்ளுவர் பெயரிலேயே  தமிழாண்டை நிறுவினர்.

திருவள்ளுவர் பிறந்ததாகப் பல தமிழறிஞர்களாலும் ஆய்வடைப்படையில் ஏற்றுக் கொள்ளப் பட்ட கி.மு.31 ஆம் ஆண்டைத் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாக அறிவித்தனர். 

பல்வேறு அரசியல் மாச்சரியங்களுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசு இதனை 2008 முதல் நடைமுறைப் படுத்த ஆணை பிறப்பித்தது. அதன்படி கி.பி ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்ட திருவள்ளுவர் ஆண்டு வரும்.                  ( 2015உடன்31ஐக் கூட்ட 2046)

திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாக எந்தத் திங்கள் என்பதையும்  தமிழக மக்களின் வேளாண் தொழில் பயனீட்டும் திங்களான தை முதல் நாளே திருவள்ளுவராண்டின் தொடக்கத் திங்கள் என்பதையும் வகுத்தளித்தனர். 

தமிழ்த் திங்கள்களின் பெயர்களும் பண்டைய வானவியல் அறிஞர்களால்                           கீழ்வானில், சூரியவீதியி்ல் அவ்வக்காலத்தே தோன்றும் உடுக்களால்                                                  ( விண்மீன்களால் ) உருவாக்கப்படும்  தொகுப்பு வடிவங்களை  அடிப்படையாகக் கொண்டே    வழங்கப்பட்டு வந்துள்ளன.

அவை 
சுறவம்- ( தை) சுறாமீன் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி
கும்பம் -( மாசி) குடம் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி
மீனம் - ( பங்குனி ) மீன்போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
மேழம் - ( சித்திரை) ஆடுபோலத் தோன்றும் விண்மீன் தொகுதி
விடை - ( வைகாசி ) எருது போலத் தோன்றும் விண்மீன் தொகுதி
ஆடவை - ( ஆனி ) இரட்டையர் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
கடகம் - ( ஆடி ) நண்டு போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
மடங்கல் - ( ஆவணி ) அரிமா ( சிங்கம்) போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
கன்னி - (புரட்டாசி ) பெண் உருவம் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
துலை - ( அய்ப்பசி) துலாக்கோல் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
நளி - ( கார்த்திகை ) தேள் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
சிலை - ( மார்கழி ) வில் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.

இந்த விண்மீன் தொகுதிகளின் வடமொழிப் பெயர்களிலிருந்தே                                                       சித்திரை முதல் பங்குனி வரை வழங்கப் பட்டு வந்தது.

சைத்ர- சித்திரை, வைசாகி - வைகாசி, மூலன் - ஆனி, உத்திராட - ஆடி, அவிட்ட - ஆவணி, புரட்டாதி - புரட்டாசி, அசுவதி - அய்ப்பசி, கிருத்திகா- கார்த்திகை, மிருகசீர்சா - மார்கழி, புனர்தை - தை, மகசி - மாசி, பல்குனா-பங்குனி.

தமிழ் உயர்தனிச் செம்மொழி என அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுவதும், அவ்வாண்டின் தொடக்கத் திங்களாக சுறவம் ( தை ) சுறவம்  முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு நாளாகவும், அந்நாளையே தமிழர் திருநாளாக, வேளாண் மக்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் நன்னாளாக . பொங்கல் திருநாளாகக் கொண்டாடி மகிழ்வதே தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகக் கொள்வோம்.
  .

Monday, January 12, 2015

இளந்தென்றல் கலைமன்றம்-10ஆம் ஆண்டு பொங்கல் விழா.

            நான் வசிக்கும் புதுக்கோட்டை சண்முகாநகர் மற்றும் விரிவாக்கப் பகுதியின் ஒருமைப்பாட்டை வளர்க்கும் குறிக்கோளுடனும்  இளந்தலைமுறையினரின் பல்திறன் மிளிர்த்தும் நோக்கோடும்,  இளந்தென்றல் கலைமன்றம் என ஒரு அமைப்பினை தி.பி.2036 ஆம் ஆண்டு சுறவம் முதல்நாள் (14.01.2006)ல் தோற்றுவித்து,  ஆண்டுதோறும் தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம்.

          இளைய தலைமுறையினரிடம் பொதிந்து கிடக்கும் பல்வகைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் அவர்களுக்கான பேச்சு, பாட்டு, கவிதை, ஓவியம். நடனம், விளையாட்டு ஆகிய போட்டிகளை நடத்தி அன்றைய நாளில் பொதுமேடையில் தமிழ்ச் சான்றோர்களை அழைத்து அவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டி வருகிறோம்.

          இச்செயல்பாட்டில் இப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கமும் இணைந்து  விழாவினை மேன்மேலும் சிறப்படையச் செய்து வரு்கின்றது.

          அவ்வகையில் இவ்வாண்டின் (10ஆம் ஆண்டு) தமிழர் திருநாளாம்  பொங்கல் விழாவினையொட்டி,   குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்பித்தல், பேச்சு, பாட்டு, ஓவியப் போட்டிகள் 11.01.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது. 

அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பகுதி சாராத நடுவர்களைக் கொண்டு, குடியிருப்புப் பகுதியினை மூன்று பிரிவாகப் பிரித்து,  வண்ணக் கோலப்போட்டி நடைபெற்றது. அனைத்து இல்ல வாயில்களும் வண்ணக்கோலங்களால் மிளிர்ந்தது. தேர்வுசெய்வதில் நடுவர்களே பெருந்திகைப்படைந்தனர்.

          இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் பங்கேற்ற அனைவர்க்கும் ஆறுதல் பரிசளிக்க விழாக்குழு முடிவுசெய்துள்ளது.

          எதிர்வரும் திருவள்ளுவர் ஆண்டு 2046 சுறவம் திங்கள் முதல்நாள்        ( 15.01.2015 ) காலை விளையாட்டு வீரர்கள் விளையாட்டுச் சுடரேந்தி நகர்வலம் வர உள்ளனர்.

        அதனைத் தொடர்ந்து  நடக்கத் தெரிந்த குழந்தைகளிலிருந்து நடைதளர்ந்த முதியவர் மற்றும்  மகளிர் பங்கேற்கும் பலவகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

           அன்று மாலை6.00 மணிக்குப் பொது மேடையில் பகுதிக் குழந்தைகளின்  மாற்றுடைப் போட்டியும் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற உள்ளன.

           அறிவுத்திறன் மற்றும்  உடல்திறன் போட்டிகளின் வெற்றி யாளர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வு  அன்று மாலை நடைபெற உள்ளது.

           கடந்த ஆண்டு தொலைக்காட்சி புகழ் கவிஞர் நா.முத்துநிலவன் குழுவினர் பங்கேற்ற பட்டிமன்றம் சிறப்பாக நடை பெற்றது. 

இவ்வாண்டு   இராபர்ட்-புவனர் குழுவினரின் கிளாசிக் குழு திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தமிழர் திருநாளைத் தரணியெங்கும் இதுபோலக் கொண்டாடுவோமே.