Tuesday, August 16, 2011

நம்பிக்கை நட்சத்திரங்கள்

16.08.2011 அன்று புதுக்கோட்டை, கைக்குறிச்சி சுபபாரதி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றநாட்டு நலப்பணித் திட்டத்  தொடக்க விழாவில் மாணவத் தன்னார்வத் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பாவலர் பொன்.க ஆற்றிய உரையினிடையே        வழங்கிய  இசைப்பாடல்.

நாளைய உலகுக்கு நம்பிக்கை ஒளிதரும் நவமணி மாலைகளே - இந்த
            நாடு நலம்பெற நயமிகு தொண்டினை நாள்தோறும் ஆற்றுங்களே
சோலையில் மல்ர்ந்து சுகந்த மணம்தரும் சுடரொளிக் காந்தள்களே - அருங்
           கோடையில் ஊற்றென குளிர்ந்த நல்லறங்களைக் குவித்திட வாருங்களே  -

நாடு நமது என்போம்-- எந்த 
           நாளும் இனிது என்போம்                                                                                                            -- நாளைய

தேசத்தின் உயிர் நிலை கிராமத்தில தான்எனும் கூற்றினை மறப்போமோ? 
          தேயுறும் வளங்களை மீட்டிடும் பாமரர் நலம்பெற உழைப்போமா?
ஓய்வின்றி உழைத்திடும் உன்னத மனங்களை மகிழ்வுறச் செய்வோமா?
          தாழ்வின்றிக் களப்பணி ஆற்ிறிட வாருங்கள் தாமதம் இனியேனோ?                      -- நாடு நமது




மானுடப் பிறவியின் மகத்துவம் மற்றவர் பயனுற வாழுவதே - கல்
          தூணெனத் தாங்கிடும் தொண்டினைத் தொடருங்கள் துயருரும் மனிதருக்கே
கனிவுடன் ஆற்றிடும் பணிகளுக் கெதிர்ப்படும் தடைகளுக் கஞ்சுவதோ? மனத் 
          துணிவுடன் தொடருங்கள் துயரங்கள் உங்கள் உயரத்தை மிஞ்சிடுமோ?                -- நாடு நமது




தமக்கென வாழ்ந்திடும் தரித்திரப் பிறவியாய் இருப்பதில் பெருமையில்லை 
         பிற்ர்க்கென உழைப்பதில் பெருமைகொள் உன்னைப் பேரிடர் தொடுவதில்லை
களிப்புடன் ஆற்றிடும் தொண்டனின் வாழ்வினில் களைப்பில்லை காணீரோ?உங்கள்
        விழிப்புணர் சேவையால் வளப்படும் மனிதங்கள் விரைந்துமே வாரீரோ?              -- நாடு நமது

1 comment:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

பாவலர் பொன்.க அய்யா அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் பாடல்களையும் சில நாடகங்களையும் நேரிலேயே பார்க்கும் வாய்ப்புக் கிட்டி மகிழ்ந்த நான், இணைய தளத்தில் இவற்றை ஏற்றிப் பார்க்கும் நாளுக்காக ஏங்கினேன்.
இன்று பார்த்து மகிழ்கிறேன் அய்யா…
விரைவில் தங்கள் ‘சங்க இலக்கிய நாடகங்கள்’ உள்ளிட்ட நாடகங்களோடு, பாடல்களையும் விரைந்தேற்ற வேண்டுகிறேன்…
வணக்கம்
தோழமையுடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை-622004
தொலைபேசி: 94431 93293
வலைப்பக்கம்: www.valarumkavithai.blogspot.com

Post a Comment