28.02.2013 அன்று தேசிய அறிவியல் நாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கொண்டாடப் பட்டது.
அன்று காலை 10.00 மணிக்கு புதுக்கோட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் புலவர் பொன்.கருப்பையா தேசிய அறிவியல் நாள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு விஜயமாணிக்கம் தலைமையில் விழாத் தொடங்கியது. பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சியினை புலவர் பொன்.கருப்பையா திறந்து வைத்தார்.
மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு பற்றிய கருத்துகளை “எளிய அறிவியல் ஆய்வுகள்“ செய்து காட்டி விளக்கினார்.
அன்று நண்பகல் 12.00 மணிக்கு புதுக்கோட்டை வடவாளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஜே.சி.ஐ. சார்பில் நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் புலவர் பொன்.கருப்பையா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.புதுக்கோட்டை ஜே.சி.ஐ தலைவர் திரு ரியாலுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பொன்.க அவர்கள் “மந்திரமா தந்திரமா?“ நிகழ்ச்சியினைச் செய்து காட்டி மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். மாணவர்கள் உற்சாகமாக செயல் விளக்கத்தில் ஈடுபாடு காட்டினர். ஜே.சி.ஐ செயலாளர் யோகா பாண்டியன் நன்றி கூறினார்.
அன்று பிற்பகல் 3.00 மணிக்கு புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகக் கூட்ட அரங்கில் புதுக்கோட்டை சங்கமம் ஜேஸீஸ் உடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து தேசிய அறிவியல் நாள் விழாவினைக் கொண்டாடியது. விழாவிற்கு சங்கமம் ஜேஸீஸ் தலைவர் திரு.வே குமாரவேலு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் திரு. அ.மணவாளன் தலைமை யேற்றார். மாவட்டப் பொருளாளர் திரு.வீரமுத்து அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
ஜே.சி. பேராசிரியர் மு.கருப்பையா, மாவட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளர் திரு எம்.மாரியப்பன், த.அ.இயக்க மாவட்டச் செயலாளர் திரு. கா.ஜெயபாலன், மாவட்டத் துணைத் தலைவர் புலவர் பொன்.கருப்பையா, திரு.மஸ்தான் பக்ருதீன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் திரு.சி.கோவிந்தசாமி, மா.செ.கு.உறுப்பினர் த.சிவராமகிருஷ்ணன், திரு முத்துக்குமார், தலைமையாசிரியர் சாமி.சத்தியமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் விருது பெற்றவர்களுக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. ஜே.ஸி இரா.ச.சிங்க பாண்டியன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

No comments:
Post a Comment