08.03.2013 அன்,று புதுக்கோட்டை சத்தியமங்கலம் கீரை தமிழ்ச்செல்வன் கல்வியியல் கல்லூரியில் ,புதுக்கோட்டை சங்கமம் ஜேஸீஸ் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து அனைத்துலக மகளிர் நாள் விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடியது.
விழாவிற்கு புதுக்கோட்டை சங்கமம் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் தலைவர் திரு. வே.குமாரவடிவேலு தலைமையேற்றார். கீரை தமிழ்ச்செல்வன் கல்விக்குழுமச் செயலாளர் திரு எஸ். பீட்டர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளர் திரு வீரமுத்து வரவேற்புரையாற்றினார்.
கல்வியல் கல்லூரி மாணவியரின் கவிதைப் போட்டி நடைபெற்றது. பெண்ணியம் பற்றிய கவிதைகள் தேர்வு செய்யப் பட்டன. மகளிர் பங்கேற்ற கோலப் போட்டியும் நடைபெற்றது.
கல்வியல் கல்லூரி பயிற்சி மாணவியர் பங்கேற்ற “பண்பாட்டு மேம்பாட்டில் பெண்க ளின் பலமா? பலவீனமா?” என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவர் உள்ளிட்ட அணியினர் சிறப்பாக வாதிட்டனர்.
லேணா தமிழ்வாணன் அவர்களின் வருகையும் உரையும் எதிர்பாராத சிறப்பாக அமைந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, மாவட்டக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் திரு.நாராயணன், திரு மாரியப்பன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.சிவராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிறைவாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா பட்டி மன்றம், கவிதைப் போட்டிகளில் பங்கேற்றவர்களைப் பாராட்டியும், ஏன் மகளிர் நாள் கொண்டாடப் படுகிறது என்பதன் விளக்கத்தையும், சாதனை மகளிர் சந்தித்த சோதனைகளும் இன்றைய மகளிர் படும் வேதனைகள் பற்றியும் “ பெண்ணினமே நிமிர்ந்து எழுகவே“ என்னும் பாடலுடன் உரையாற்றினார்.
கவிதை, கோலப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் பட்டிமன்றத்தில் பங்கேற்ற மாணவியர்க்கும் செயலாளர் பீட்டர் அவர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். நிறைவாக நிகழ்வினைத் தொகுத்து வழங்கிய கல்வியல் கல்லூரி முதல்வர் திரு கேசவன் அவர்கள் நன்றியுரையாற்றிட நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே முடிந்தது.,

No comments:
Post a Comment