03.03.2013 முற்பகல் புதுக்கோட்டை கோயில்பட்டி சமுதாயக் கூடத்தில், கோயில்பட்டி “வழிகாட்டி சமூகப்பணி மன்றத்தின் இரண்டாம் ஆண்டு கல்வி ஊக்குவிப்புப் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் திரு.ரெ.முத்துச்சாமி அவர்கள் தலைமைதாங்கினார். ஊர்த்தலைவர் க.சுப்பையா அம்பலம் அவர்கள் முன்னிலையேற்றார். வழிகாட்டி சமூகப்பணி மன்றத்தின் தலைவர் , தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் திரு எஸ்.ரெங்கராசு அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
வழக்குரைஞர் செல்வக்குமார், தலைமையாசிரியர் பெட்லாராணி,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.அடைக்கலம், மேனாள் நகர்மன்ற உறுப்பினர் பி.கருப்பையா, தி.க.மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கடந்த ஆண்டு 10,12, வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில், பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், 80 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் , கோயில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்பு வாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், மணிமன்றம் மரகதவள்ளி அறக்கட்டளையின் நிறுவுனர் புலவர் பொன்.கருப்பையா பரிசுகளை வழங்கிப் பாராட்டுரை நல்கினார்.
அவர் தனது உரையில் மதிப்பெண்கள் பெறுவது மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் சமூக மேம்பாட்டிற்கான திறன் பெறும் வாய்ப்புகளும் மாணவர்களுக்க உருவாக்கிக் கொடுக்கப் படவேண்டும். அதற்காக பெற்றோர், ஆசிரியர், சமுதாயம் இணைந்து செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். விழா நிறைவில் மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு கே.ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment