17.11.2011 அன்று புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் நடந்த த மு எ க ச திருக்கோகர்ணம் கிளைக் கூட்டத்தில் பாவலர் பொன்.க . எழுதி இசைத்துப் பாடிய பாடல்.
ஓடுகிற ஓடைநீரைப் போல மனசு இருக்கணும்
ஒவ்வொரு நாளு விடியும் போதும் புதுசு புதுசாப் பொறக்கணும் -நாம புதுசு புதுசாப் பொறக்கணும் -- ஓடுகிற
தேங்கிக் கெடக்கும் குட்டைநீரில் தீங்குசெய்யும் புழுக்கள் நெளியும்
தேக்கி வைக்கும் துயரம்நெஞ்சில் தேடலுக்குத் தடையா அமையும்
தென்றல் நம்மைத் தீண்டுமுன்னே சூறாவளிக் காற்றாய்த் தோன்றும்
தேவையற்ற சுமையை நீக்கத் தேன்மலரின் இதழ்கள் விரியும் -- ஓடுகிற
வெம்மை குளிரக் கருமேகம் மண்ணில் மழையைப் பொழியுது
வெடிச்சுச் செதறும் மகரந்தந்தான் வெளைச்சல் பெருக்கித் தருகுது
வெந்தனலாய்க் கவலை தேங்க மனசில் மகிழ்ச்சி கருகுது
வெளியேறும் வேர்வைத் துளியே வியக்கு ம் உழைப்பைப் பெருக்குது -- ஓடுகிற
அழுத்தம் நெறைஞ்ச எடந்தனிலே வெடிக்கும் நிகழ்வு இயற்கையே
அரும்பும் இடரைக் கடப்பதிலே ஆற்றல் பெருகும் நெறையவே ஆற்றாத சோகம் ஆழியும் அடுத்து சுமையைப் பகிரவே
ஆறுதலை ஏற்கும் நெஞ்சில் அமைதி தவழும் நெடுகவே -- ஓடுகிற

3 comments:
வணக்கம். பாடல் அருமை.
முடிந்தால் வீடியோ-வையும் பகிருங்கள்.
அய்யாவிற்கு வணக்கம்..
பாடல் மிக அருமை. கேட்கும் வாய்ப்பு தவிர்க்க முடியாத காரணத்தால் நழுவிப்போனது. மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.
அருமை அய்யா ...
Post a Comment