Saturday, December 21, 2013

பாரதியார் -வினாடி-வினா, சுற்று 4

பாரதியார் பிறந்தநாள் விழாவில் நடத்தப்பட்ட வினாடி-வினா நிகழ்ச்சியின் நான்காம் சுற்று.

                                            சுற்று -4 முப்பெரும் பாடல்கள்

1. கண்ணன் பாட்டு முதல் பதிப்பு யாரால் எங்கு வெளியிடப்பட்டது?

2. தருமத்தின் வாழ்வதனைச் சூதுகவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும் - இவ்வரிகள் பாரதியாரின் எக்காவியத்தில்  யாருடைய கூற்றாக அமைந்துள்ளது?

3. பாரதி சின்னப்பயல் என்னும் ஈற்றடியைப் பாரதிக்குக் கொடுத்துப் பா புனையச் சொன்ன புலவர் யார்?

4. உன் கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில் உதிரம் கொட்டுதடி- இப்பாடல் வரிகளில் யாரை யாராகக் கண்டு பாரதி பாடியிருக்கிறார்?

5. துச்சாதனன் திரவுபதியின் கூந்தல் பற்றி இழுத்துச் செல்கையில் அதைத் தடுக்காது பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பாரதி எவ்வாறு இழித்துரைக்கின்றார்?

6. காதல்  காதல்  காதல்,  காதல் போயின் சாதல் சாதல் சாதல் - இவ்வரிகள் இடம்பெற்ற பாரதியின் படைப்பு எது

7.வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி - கண்ணம்மா கூறிய வார்த்தைகளாகப் பாரதி கூறியுள்ள வரிகள் யாவை?

8. பாப்பா பாட்டு யாருக்காக எழுதப்பட்டது?

9.எவற்றைப் புசி நறுநெய் குளித்துச் சீவிக்குழல் முடிப்பேன் எனப் பாஞ்சாலி சபதமேற்றாள்?

10. கண்ணன் என்தாய் என்ற பாடல் முதன்முதலாக எப்போது எவ்விதழில் வெளியிடப்பட்டது?

என்ன நண்பர்களே விடைகள் கண்டுபிடித்து விட்டீர்களா?

சரிபார்க்க “மணிமன்றம்-புதுகை“ வலைப் பக்கம் பாருங்கள்.

3 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அய்யா வணக்கம். தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் நம் மணிமன்ற நிருவாகியர், உறுப்பினர் அனைவர்க்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் - நா.முத்துநிலவன்

அ.பாண்டியன் said...

வணக்கம் ஐயா
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

Kasthuri Rengan said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அய்யா

Post a Comment