25.03.2015 அன்று புதுக்கோட்டை அரிமளம் ஊராட்சி ஒன்றியம் மிரட்டுநிலை ஊராட்சியில் உழைக்கும் மகளிரோடு ஓர் இனிய சந்திப்பு.
மா.ச.சுவாமிநாதன்ஆராய்ச்சி நிறுவனம், அக்சயா, மாவட்ட காசநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இயக்கம் ஆகியவை சார்பாக உழைக்கும் மகளிரை அவர்கள் பணிசெய்யும் இடத்தருகேயே கூட்டி, அவர்களிடையே உலக மகளிர் நாள் வரலாற்றையும், உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மகளிர் மேன்மைகள் பற்றியும் பாவலர் பொன்.கருப்பையா கருத்துரை யாற்றினார்.
களப்பணியாளர் கந்தசாமி ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பார்த்தசாரதி அவர்கள் தலைமை வகித்தார்.
மகளிர் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் அறியாமை, மூடநம்பிக்கை, பயம், வரதட்சணை, வன்கொடுமை , மது ஆகியவற்றை தகர்க்கவும், அறிவியல் மனப்பான்மை வளர்க்கவும் வேண்டியதன் அவசியம் பற்றியும் உழைக்கும் மகளிரிடையே வலியுறுத்தப் பட்டது.
கலந்துரையாடலில் மகளிர் ஆர்வமுடன் ஈடுபட்டதும், கேள்விகள் கேட்டதும் சிறப்பாக இருந்தது.
அறியாமை இருளகற்றும் இந்த அருமையான சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததில் மனநிறைவு.

No comments:
Post a Comment