புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி கலையரங்கில், இன்று 29.06.2013 மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கும், தொண்டு நிறுவன உறுப்பினர்களுக்கும் ஒரு நாள் “ முதலுதவி“ ப் பயிற்சி முகாமை நடத்தியது.
மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழு செயற்குழு உறுப்பினர் என்ற முறையில் பாவலர் பொன்.கருப்பையா அம்முகாமில் கலந்து கொண்டார். செஞ்சிலுவைச் சங்க மாவட்டச் செயலாளர் முனைவர் ராசா முகம்மது அவர்கள் தலைமையில் முகாமினை மாவட்டத்துணைத் தலைவர் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் தொடங்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்ம்ஸ்ட்ராங் வரவேற்புரையாற்றினார்.
செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் மாநிலக் கருத்தாளர் திரு. இராதாகிருஷ்ணன் “முதலுதவி“ பற்றிய செயல் விளக்கங்களோடான பயிற்சியினை அளித்தார்.
திடீர் விபத்துகள், நோய் மற்றும் இயற்கைச் சீற்றங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடி முதலுதவி அளிக்கப்படாமையாலே பெரும்பாலான் மரணங்கள் நிகழ்கின்றன.. உரிய நேரத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு செயற்கைச் சுவாச முறையில் முதலுதவி அளிப்பதையும், இரத்தப் போக்கை நிறுத்தும் வழிமுறைகள், தீவிபத்தில் பாதிக்கப் பட்டவர்க்கு அளிக்கப் பட வேண்டிய முதலுதவிகள் முதலியவை பற்றி அவர் விளக்கமளித்தார்.
மாலையில் நடந்த நிறைவு விழாவில் செஞ்சிலுவைச் சங்க இணைச் செயலாளர் பேராசிரியர் எஸ்.விசுவநாதன் அவர்கள் முன்னிலையில் புதுக்கோட்டை தீத் தடுப்பு மற்றும் மீட்புத்துறை நிலைய அலுவலர் திரு சாந்தார் அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இன்றைய இயற்கைச் சீற்றப் பேரிடர்களிலும், சாலை , தீ விபத்துகளிலும் பாதிக்கப் படுவோரைக் காக்க இத்தகு பயிற்சிகள் அவசியமானது என்பதையும், இப்பயிற்சி மாவட்டம் முழுமைக்கும் கொண்டு செல்லப் படவேண்டு மென்பதையும் பாவலர் பொன்.கருப்பையா வலியுறுத்தினார்.

No comments:
Post a Comment