. 12.08.2013 அன்று மாலை புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் தமுஎகசவின் புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழு மாவட்டத்தலைவர் பிரகதீசுவரன் தலைமையி்ல் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் இரமா.ராமநாதன் வேலை அறிக்கை அளித்தார். அறிக்கையின் மீதான விவாதங்களி மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மிகச்சிறந்த சமுதாய மேம்பாட்டு அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கிளைகளின் அண்மைக்கால செயல்பாடுகள் மந்தநிலையில் இருப்பதையும், உறுப்பினர் சேர்க்கை, கிளைச்செயல்பாடுகளில் மாவட்டப் பொறுப்பாளர்களின் தீவிர ஈடுபாடு அதிகரிக்கப் பட வேண்டும் என்பதையும் பாவலர் பொன். கருப்பையா தனது கருத்துரையில் பதிவு செய்தார்.
சிறப்பாகச் செயல்பட்ட கறம்பக்குடி கிளைப் பொறுப்பாளர்களையும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களையும் அவர் பாராட்டிப் பேசினார். தமுஎகச வில் இணைய விரும்பும் நாட்டுப்புறக்கலைஞர்களையும் வரவேற்றார்.
ஆகத்து 17,18 நாள்களில் தூத்துக்குடியில் நடைபெற உள்ள தமிழகப் பண்பாட்டுச் சூழல் மாநாட்டில் கலந்து கொள்ள எட்டுப் பிரதிநிதிகளை அனுப்புவது, தொடக்கக் கல்வியில் ஆங்கில வழிக்கல்வியின் திணிப்புக்கு எதிர்ப்பு, புதுக்கோட்டை தொடர்வண்டி நிலையத்தை சந்திப்பாக மாற்றக் கோரல், பாதாள சாக்கடைத் திட்டம் விரைந்து முடித்தல் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
முன்னதாக அண்மையில் மறைந்த கலையுலகச் சிற்பிகள், பி.பி.சீனிவாஸ, டி.எம்.சௌந்தரராசன், கவிஞர் வாலி, உத்தரகாண்ட் இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தோர் ஆகியோர்க்கு அஞ்சலி செய்யப்பட்டது.
மாவட்டப் பொருளாளர் மதியழகன் நன்றி கூறக் கூட்டம் இனிதே முடிவுற்றது.

No comments:
Post a Comment